உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய சூத்திரதாரிகள் விரைவில் வெளிப்படுத்தப்படுவர்கள்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய சூத்திரதாரிகள் விரைவில் சமூகத்துக்கு வெளிப்படுத்தப்படுவர்கள் என்று பெருந்தோட்ட அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தற்போது விசாரணைகள் நியாயமாக முன்னெடுக்கப்பட்டு வருவதை பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் உள்ளிட்ட அனைவரும் அறிவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், சட்ட ரீதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் இன்று சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது என்ற நம்பிக்கை அனைவர் மத்தியிலும் ஏற்பட்டுள்ளதாகவும் பெருந்தோட்ட அமைச்சர் கூறியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள் யார் என்பதை வெளிப்படுத்த நீண்ட காலம் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது என்றும் பெருந்தோட்ட அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.