உகாண்டா நாட்டில் புதுவிதமான டிங்கா டிங்கா என்ற வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இது அதிக அளவில் பெண்கள், குழந்தைகளை தாக்குவதாகத் தெரியவந்துள்ளது.
கொரோனாவை தொடர்ந்து உலகின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான வைரஸ் தொற்றுகள் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் பெண்கள் மற்றும் சிறுமிகளை தாக்கும் புதிய வைரஸ் ஒன்று உகாண்டாவில் பரவி வருகிறது.
அதிகப்படியான உடல் நடுக்கம் மற்றும் காய்ச்சல் போன்ற சிக்கல்கள் இவற்றின் முதன்மையான அறிகுறிகளாக உள்ளன. இது உடல் இயக்கத்தையும் கடுமையாக பாதிக்கிறது எனவும் கண்டறியப்பட்டுள்ளது.