ஈழத்தமிழரின் இறைமையை பிரித்தானிய காலனித்துவ அரசாங்கம் ஒடுக்கிய 78வது ஆண்டுக் கரிநாள் 04.02.2026: சூ.யோ. பற்றிமாகரன்

வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் இன்று வரை இலங்கைத் தீவில் தங்கள் வரலாற்றுத் தாயகத்தில் இந்த மண் எங்களின் சொந்த மண்’ என்கின்ற தொன்மையும் தொடர்ச்சியுமான இறைமையு டன் வாழ்ந்து வரும் உலகின் மூத்த குடிகளில் ஒருவராகிய இலங்கைத் தீவின் தேச இன மக்களாகிய ஈழத்தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இலங்கைத் தீவில் வரலாற்றுத் தொடக்கக் காலம் முதலாக ஈழத்தமிழர்களின் அரசுக்கள் இருந்தமைக்கான சான்றுகள் காணப்பட்டாலம் 13ம் நூற்றாண்டு முதலான நவீன அரசான யாழ்ப்பாண அரசே உலக அங்கீகாரத்தைப் பெற்ற அரசாக உள்ளமை வரலாறு. இந்த யாழ்ப்ப்பாண அரசின் இறைமையை 1621 இல் போர்த்துக்கேய காலனித் துவ ஆட்சியாளர்கள் 1505 முதல் 1621 வரையான 116 ஆண்டு கால முயற்சியின் பின்னர் கைப்பற்றினர். ஆயினும் ஈழத்தமிழர்கள் போர்த்துக்கேயரிடமிருந்து விடுபடு வதற்கான முயற்சிகள் ஈழத்தமிழர் பண்பாட்டைப் பேணுதல் வழியாகத் தொடர்ந்து கொண்டே இருந்தனர்.
1658 இல் யாழ்ப்பாணத்தில் போர்த்துக்கேயரை நெதர்லாந்து டச்சுக்காரர் கைப்பற்றியதால் அவர்கள் போர்த் துக்கேய காலனித்துவ அரசிடம் 37 ஆண்டுகள் இருந்த யாழ்ப்பாண அரசின் இறைமையையும் கைப்பறற்pனர். ஆயினும் ஈழத்தமிழர்களின் பண்பாட்டைப் பேணுதல் வழி யாக விடுபடும் முயற்சி டச்சு ஆட்சியிலும் தொடர்ந்தது.
1796 இல், 31.12.1600 இல் முதலாவது எலிசபேத் மகாரா ணியின் அரசாணையின் கீழ்  உருவாக்கப்பட்ட இலண்டன் கிழக்கிந்தியக் கம்பெனியினர் டச்சுக்காரிடமிருந்து கைப் பற்றினர். இத்தீவின் ஆட்சியை 1802இல் பிரித்தானிய பேரரசு முடிக்குரிய காலனித்துவ நாடாக அறிவித்தது. இந்த பிரித்தானிய காலனித்துவ ஆட்சியார்கள் தங்களின் ஆட்சிச் செலவைக்குறைப்பதற்காகவும், ஒரே தன்மையான நீதிமுறைமையை நடைமுறைப் படுத்துவதற்காகவும் ஒரே நிர்வாகத்தை நடத்துவதற்காகவம் மக்களின் விருப்பு; பெறப்படாது அதுவரை இல்லாத முறைமையாக ஒற்றை யாட்சி உடைய சிலோன் என்னும் செயற்கையான நாடாகவும் சிலனிஸ் என்ற செயற்கையான தேசமக்களாகவும், 1833இல்  கோல்புறூக் கமரோன் சீர்திருத்தத்தின் மூலம் அறிவித்து தமக்கான காலனித்துவ ஆட்சியைப் பலப்படுத்தினர்.
இன்றைய கொழும்பு றோயல் கல்லூரியும் கோல்புறூக் கமரோன் சீர்திருத்தத்தில் பிரித்தானியர் தங்களுக்கான கல்வி முறைமையைக் கட்டமைக்க 1835 ஏற்படுத்திய ஒன்றாகவே உள்ளது. 120 பேரை பிரித்தானிய சிவில் சேவையாளர்களாக இணைவதற்கு றோயல் கல்லூரிமூலம் வழிகாட்டப்பட்டது.  இது ஆங்கிலம் படித்த கற்றோர் குழாத்து சனநாயக ஆட்சி முறைமைக்கும் ஆங்கிலேய ஆட்சியாளர்ளையும் மக்களையும் இணைக்கும் முகவர்களாகச் செயற்படுவதற்கான முறையில் பயிற்று விக்கப்படவும்  வித்திடப்பட்டது.
தமிழர்களினதும் சிங்கள வர்களினதும் தனித்தனி அரசுக்கள் ஐந்து மகாணங்களாக இணைக்கப்பட்டு 25 மாவட்டங்கள் அதற்குள் உருவாக் கப்பட்டு ஒற்றையாட்சியில் வுருமானத்தை பெருக்கு வதற்காக ஒரே நிர்வாகமும் ஒரே நிதிமுறைமையும் இலங்கை முழுவதற்கும் கொண்டு வரப்பட்டது.
இவ்வாறாக ஈழத்தமிழர்களின் இறைமையுள்ள தாயகத்தின் நிலமும் தேசியமும் தன்னாட்சி உரிமையும் சிங்களவர்களின் நிலத்துடனும் தேசியத்துடனும் தன்னாட்சி உடனும் இணைக்கப்பட்ட வரலாற்றுத் தவறை கோல்புறூக் கமரோன் சீர்திருத்தம் செய்தது. இச்சீர்திருத்தத்தின் வழி உருவாகப்பட்ட சட்டவாக்க சபைக்கு 09 உத்தியோக பிரதி நிதிகளும் 06 உத்தியோகப்பற்றற்ற பிரதிநிதிகளுமாகப் 15 பேர் ஆளுநரால் நியமிக்கப்பட்டனர். 06 உத்தியோகப் பற்றற்ற பிரதிநிதிகளில் 03 ஐரோப்பியர்களும் 01 சிங்கள வரும் 01 தமிழரும் 01 பறங்கியரும் நியமிக்கப்பட்டு சிங்கள தமிழர் இலங்கையின் சமமான தேசமக்கள் என்பது வெளிப்படுத்தப்பட்டது. ஆயினும் சட்டசபையில் ஆட்சி யாளர்களால் கொண்டு வரப்படும் எதற்கும் வெறுமனே ஆலோசனை வழங்கும் உரிமை மட்டுமே அளிக்கப்பட்டது.
1908 இல் சேர் யேம்ஸ் பீரிஸ்சால் கீழ்ததேச உற்பத்தி யாளர் கிளப், சிலாப கிளப் யாழ்ப்பாண கிளப் என்பவற்றின் சார்பாக உத்தியோகப் பற்றற்ற பிரதிநிதிகள் தொகையை அதிகரிக்கமாறும் தேர்தல் மூலம் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யுமாறும் இனவாரிப் பிரதிநிதித்துவ நியமன முறையை கைவிட்டு மாவட்ட ரீதியில் பிரதிநிதிகளை தெரிவு செய்யு மாறும் பொன்னம்பலம் இராமநாதன பொன்னம்பலம் அரு ணாசலம் போன்ற தமிழ்த்தலைமைகளுடன் இணைந்து வலியுறுத்தினார்.
இதனடிப்படையில்  1910 இல் கிறு மக்கலம் சீர் திருத்தத்தின் மூலம் ஆங்கிலம் படித்த சிலனிஸ_க்கு சட்டசபையில படித்த சொத்துடைமையுள்ள ஆண்களின் வாக்குகள் மூலம் தேர்ந்தெடுக்கபடும் பிரதிநிதியாக அமரும் வாய்ப்பு உருவாக்கப்பட்டது. இதன் மூலம் சாதாரண மக்களினதும் பெண்களினதும் சனநாயகப் பங்களிப்பு மறுக்கப்பட்டு படித்த சொத்;;துடைமை உள்ளவர்களின் பிரதிநிதித்துவ பங்களிப்பு ஊக்குவிக்கப்ட்டது. இதன் விளை வாக 1910 இன்  புதிய சட்டவாக்கசபையில் 11 உத்தியோக அலுவலர்களும் 10 உத்தியோகப் பற்றற்ற அலுவலர்களும் அமைந்தனர்.
இந்த உத்தியோகப் பற்றவர்களில் 04 பேருக்கு சபையில் மட்டுப்படுத்தப்பட்ட வாக்குரிமையும் ஆறுபேரு க்கு நியமன உரிமையும் அளிக்கப்பட்டது. வாக்குரிமை பெறற்வர்களில் ஒருவர் பறங்கியராகவும் இருவர் ஐரோப் பியராகவும் ஒருவர் மட்டும் படித்த சிலனிஸ் ஆகவம் கடடமைக்கப்பட்டது. இதனால் 1910 இல் படித்த சொத்து டைமையுள்ள பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்ட பொன்னம்பலம் இராமநாதனுக்கு அந்த உரிமை கிடைத்தது. நாடெங்கும் தவறணைகள் திறக்கப்பட்டு மதுவிற் பனையை அதிகரித்தமைக்கு எதிரான நாடு தழுவிய 1912ம் ஆண்டு மதுப்பாவனை எதிர்ப்புப் போராட்டமும், 1915 சிங் கள முஸ்லீம் கலவரமும் 1919 இல் இலங்கை தேசிய காங்கி ரசை தொடங்க வைத்தது.
பொன்னம்பலம் அருணாசலம் இதன் தலைவராக 1919 இல் தெரிவு செய்யப்பட்டாலும் சிங்கள பௌத்த தெசிய வாதத்தின் எழுச்சி காரணமாக 1920 இல் அவர் வெளியேறி தமிழர் மகாசபையை தோற்றுவித்து தமிழ்த்தேசியத்தினை முன்னெடுக்க வேண்டி வந்தது தன்னாட்சிக்கான கோரிக் கையும் தமிழரால் தொடங்கப் பெற்றது.  ஆயினும்  1902இல் மன்னிங் சீர்திருத்தத்தின் மூலம் சட்டசபையில் 37 பேர் கட்டமைக்கப்பட்டு 14 உத்தியோக அலுவலர்களும் 23 உத்தியோகப் பற்றற்ற அலுவலர்களும் அவர்களில் 7 பேர் நியமிக்கப்பட்டும் 14 பேர் வாக்குரிமை மூலம் தெரிவு செய்யப்பட்டும் பிரதநிதித்துவத்தில் ஈழத்தமிழர்களின் எண்ணிக்கை வீழச்சியடைந்தது.
இந்நிலையில் 1924ம் ஆண்டின் மன்னிங்கின் இரண்டாவது சட்டசபை 49 பிரதிநிதிகளை கொண்டதாக மாற்றப்பட்டு 12 பேர் உத்தியோக அலுவலர்களாகவும் 37 பேர் உத்தியோகப் பற்றற்றவர்களாகவும் அவர்களில் 29 பேர் வாக்குரிமை மூலம் தெரிவு செய்யப்படுபவர்களாகவும் 08 பேர் நியமனம் பெறுபவர்களாகவும் மாற்றப்பட்டு கண்டிச் சிங்களவர்கள் கரையோரச் சிங்களவர்கள் தமிழர்கள் மலை யகத் தமிழர்கள் முஸ்லீம்கள் பறங்கியர் மலேயர்கள் எனப் பிரித்தாளும் தந்திர அரசியலும் வேகப்படுத்தப்பட்டு இதன் விளைவாக சிங்கள பௌத்த மேலாண்மை சட்டசபையில் தோற்றம் பெற்றது. அடுத்து வந்த டொனமூர் சீர்திருத்தம் ஈழத்தமிழரின் சிங்களவர்களின் அரசுக்களின் நிலப்பரப்பு என்பதை முற்றாக நிராகரித்து முழு இலங்கையாக 18 வயதுக்கு மேற்பட்ட எல்லாருக்கும் வாக்குரிமை மூலம் தெரிவாகிய பொழுது சட்டவாக்க சபை அரசசபையாக பொறுப்பாட்சியையும் சிலனிஸ_க்கு வழங்கிய பொழுது 61 உறுப்பினர்களில் தொகுதிவாரியாக 50 பேரும்  அரசச் செயலாளர் நிதிச் செயலாளர் சட்டச்செயலாளர் மூவ ரும் அரசால் நியமிக்கப்படும் 8 பேருமாக அமைந்து ஈழத்தமிழர்கள் சிறுபான்மையினராகவும் சிங்களவர்கள் பெரும்பான்மையினராகவும் மாறியதும் அல்லாமல் சிங்களவர்களை மட்டுமே கொண்ட அமைச்சரவையும் முதன்முதல் கட்டமைவானது.
அடுத்து 1948 இல் சோல்பரி அரசியலமைப்பால்  115 ஆண்டு கால பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் பின்னர் தாங்கள் உருவாக்கிய சிலோன் என்னும் நாட்டுக்குத் தொடர்ந்தும் இறைமையின் மீயுயுர் இறைமையாளராக சோல்பரி அரசியலமைப்பின் 29(2) விதியின் மூலமும் அரசின் தலைவியாக அதே சோல்பரி அரசியலமைப்பின் மூலமும் மாண்பமை 2வது எலிசபேத் மகாராணி அவர்களே தொடர்ந்த நிலையில் சிங்களப் பெரும்பான்மை ஒற்றை யாட்சிப் பாராளுமன்ற முறையை உள்ளடக்கிய பாராளு மன்றம் என்னும் கீழ்ச்சபையை 18 வயதடைந்த சிலனிஸ் மக்கள் வாக்கு மூலம் தெரிவு செய்யக் கூடிய முறையிலும், செனட் எனப்படும் மேல்சபைக்கான உறுப்பினர்களை மகாராணியின் தேசாதிபதி நியமிக்கக் கூடிய முறையிலும் சுதந்திரத்தை 04.02. 1948 இல் வழங்கினர்.
இதன் மூலம் பிரித்தானியர் தங்களிடம் 152 ஆண்டு களாக இருந்த ஈழத்தமிழரின் இறைமையை ஈழத்தமிழரிடம் மீளவும் கையளிக்காது சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்ற முறைமைக்குள் சிலோன் என்ற நாட்டினுள் உள்ளடக்கியதால் பிரித்தானியக் காலனித்துவ ஆட்சி உருவாக்கிய ஈழத்தமிழர் மேலான சிங்கள பௌத்த நவகாலனித்துவ ஆட்சியாக உலக வரலாற் றில் இவ்வாட்சி ஆரம்பமாகியது.
ஆனால் ஈழத்தமிழர்களில் இது தோற்றுவித்த சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்ற முறைமை ஈழத்தமிழர்களுக்கான சிங்களப் பாராளுமன்றக் கொடுங்கோன்மையாகி இன்று வரை 78 ஆண்டுகள் சிங்கள பௌத்த பேரினவாதத்தையே முன்னெடுக்கும் சிங்கள ஆட்சியார்கள் ஈழத்தமிழின அழிப்பையும் ஈழத் தமிழினத்துடைப்பையும் பண்பாட்டு இனஅழிப்பையும் நாட்டின் இறைமைக்கும் ஒருமைப்பாட்டுக்குமான தேசிய பாதுகாப்பு நடவடிக்கை என நியாயப்படுத்தச் செய்கிறது.
இந்நிலையில் காலனித்துவத்தால் தீர்க்கப்படாத பிரச்சினையாக ஈழத்தமிழர்களின் தேசிய பிரச்சினை இன்று மட்டும் தொடர்வதால் தான் 2023 இல் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாணப் பாராளுமன்றப் பிரதிநிதியுமான கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் அவர்கள் ஐக்கிய நாடுகள் மனித உரி மைகள் பேரவையில் ஈழத்தமிழர்கள் தங்கள் தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் அதனைப் பிரயோகித்து தங்களுக்கான பாதுகாப்பான அமைதியுடன் கூடிய அரசையும் வளர்ச்சிகளையும் உருவாக்கும் வரை ஐக் கிய நாடுகள் சபை ஈழத்தமிழருக்கான சிறப்புப் பிரதி நிதியை நியமித்து அவர்களது நாளாந்த வாழ்வையும் உடைமைகளையும் உயிரையும் பாதுகாக்க வேண்டுமெனக் கோரினார்.
இவ்வாண்டும் ஈழத்தமிழர்கள் ஒருங்கிணைப்புக் குழுக்களாக உலகெங்கும் 04.02. 2026 இல் தன்னாட்சிக்கான தங்கள் குரல்களைப் பலமாக எழுப்பிப் போராட்டத்தைத் தொடர்கின்றனர். இந்தக் கோரிக்கைகள்  உலக மன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு பிரித்தானியா இலங்கைக்கு சுதந்திரம் வழங்கிய முறைமை குறித்த மக்கள் தீர்ப் பாயமொன்றை அமைத்து எவ்வாறு பிரித்தானியா ஈழத் தமிழர்களின் இறைமைக்கு எதிராகச் செயற்பட்டது என்ற உண்மையை வெளிக் கொண்டு வர வேண்டிய தேவை உள்ளது என்பதே இவ்வாய்வின் கருத்தாக அமைகிறது.