ஈரான் மீதான போர் ஒரு பிராந்திய போராக மாற்றம் பெறும் என ஈரான் மீண்டும் மீண்டும் தெரிவித்து வந் ததை புறக்கணித்த மேற்குலக கூட்டணி தற்போது ஒரு மீள முடியாத பொறிக்குள் சிக்கியுள்ளது.
வெனிசுலாவில் பெற்ற வெற்றியை போல அல்லது சிரியாவில் பெற்ற வெற்றியை போல ஒரு இலகுவான வெற்றியை ஈரானின் தலைமைப் பீடத்தை அழிப்பதன் ஊடாக பெற்றுவிடலாம் என இஸ்ரேலும் அமெரிக்காவும் போட்ட கணக்குள் முற்றாக தவறாகி போயுள்ளதையே தற் போதைய களயதார்த்தம் காட்டுகின்றது.
ஈரானை தாக்கினால் ஈரான் இஸ்ரேலையும், அமெரிக்கத் தளங்களையும் தாக்கும் என்பதை கணிப் பிட்டு இஸ்ரேலை பாதுகாக்க ஜெரால்ட் போர்ட் என்ற விமானந்தாங்கி கப்பல் இஸ்ரேலுக்கு அருகில் நிறுத் தப்பட்டதுடன், பெருமளவான வான்பாதுகாப்பு ஏவுக ணைகளும் குவிக்கப்பட்டன. கடந்த ஜனவரி மாதம் முதல் 250 இராணுவ சரக்கு விமானங்கள் இஸ்ரேலில் தரை யிறங்கியிருந்தன.
மறுவளமாக மத்தியகிழக்கில் உள்ள அமெரிக்கத் தளங்களில் இருந்த படையினர் அருகில் உள்ள ஆடம்பர விடுதியில் தங்கவைக்கப்பட்டனர். ஆனால் திட்டமிடப்பட்ட வியூகம் வேலைசெய்யவில்லை. மாறாக ஈரான் அமெரிக்க படையினர் தங்கியிருந்த விடுதிகளை மட்டுமல்லாது, அமெரிக்கத் தளங்கள், அமெரிக்க மற்றும் நேட்டோ கூட்டணி நாடுகளின் முதலீடுகள், எரிபொருள் சுத்திகரிப்பு நிலையங்கள், அனைத்துலக விமான நிலையங்கள் மற்றும் அமெரிக்க தூதரகங்கள் மீது தாக்குதலை ஆரம்பித்ததுடன், அமெரிக்க, இஸ்ரேல் நாடுகளுடன் நேரிடையாகவும் மறை முகமாகவும் ஒத்துழைக்கும் 17 நாடுகளை ஒரே தடவையில் தாக்கியதுடன், இந்த பத்தி எழுதப்படும் வரையிலும் தாக்குதல் தொடர்கின்றது.
தாக்குதல் ஆரம்பிக்கப்படும்போது அது 2 அல்லது 3 நாட்களுக்குள் முடிந்துவிடும் என்றே அமெரிக்கா நம்பியது. ஆனால் தற்போது அது 4 வாரங்கள் நீடிக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்றம்ப் தெரிவித்துள்ளபோதும், எதிர் வரும் செப்டம்பர் மாதம் வரையிலும் நீடிக்கும் என அமெரிக்க ஊடகமாக பொலிற்றிக்கோ தெரிவித்துள்ளது மத்திய கிழக்கு நாடுகளை மட்டுமல்லாது, உலக நாடுகளை கலங்கடித்துள்ளது.
படைத்துறை ரீதியாக அமெரிக்கா ஈரானின் வான் பரப்பை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறினாலும், அதுவும் முழுமையாக இல்லை. அவர்கள் ஈரானினில் எல்லைப் புறத்தில் இருந்து அதி உயர்வாக பறக்கும் எப்-22, எப்-35, பி-2 மற்றும் பி-52 விமானங்கள் மூலம் குண்டுகளை வீசுகின்றனர். குவைத்து வான்படையினரின் எப்-18 விமானத்தில் இருந்து ஏவப்பட்ட 3 வான் தாக்குதல் ஏவுகணைகள் மூலம் 3 எப்-15E விமானங்களை அமெரிக்கா இழந்துள்ளது. மேலும் ஈரானில் இரண்டு எப்-15E விமா னங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டதை இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்தாலும் அமெரிக்கா மறுத்து வருகின்றது.
ஈரானின் வான் பரப்பை அவர்கள் வைத் திருந்தாலும், மத்திய கிழக்கில் உள்ள வான்படை, கடற்படை மற்றும் தரைப்படைத் தளங்கள் அனைத்தையும் அமெரிக்கா இழந்துவிட்டது. அதாவது அவர்கள் அதனை தேவையான நேரத்தில் பயன்படுத்த முடியாது இதனை மறுவளமாக கூறினால் ஈரான் அவற்றை தன்வசப்படுத்தியுள்ளது.
ஹவுத்திகளால் ஆப்பிரிக்காவில் உள்ள துறை முகங் கள் முழுமையாக பாதிக்கப்படுவதால், அமெரிக்க கடற்படை அதன் டோமாஹாக் ஏவுகணைகளை கப்பல் களில் கிழக்கே பெரும்பாலும் பாகிஸ்தான் அல்லது இந்தியாவில் மட்டுமே மீண்டும் ஏற்ற முடியும், அவற்றை கடலில் வைத்து ஏற்ற முடியாது. டியாகோ கார்சியா சுமார் 3,000 கிமீ தொலைவில் உள்ளது எனவே அங்கு சென்றுவர ஒரு வாரத்திற்கும் மேலாக எடுக்கும். மேலும் ஈரானின் தாக்குதல்களை தடுப்பதற்கு இதுவரையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படையினர் 800 இற்கு மேற்பட்ட தாட் மற்றும் பற்றியாட் ஏவுகணைகளை பயன்படுத்தியுள்ளனர். இருந்தாலும் ஈரானின் தாக்குதல்களை முற்றாக முறியடிக்க முடியவில்லை.
ஒரு மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்களை நடத்திய வாறு ஈரானிய மக்களை அல்லது குருதிஸ் படையினரை தரையில் ஈரானுக்கு எதிராக பயன்படுத்தும் சி.ஐ.ஏயின் திட்டங்களும் வெற்றிபெறவில்லை. ஆன்மீகத் தலைவர் அயத்தொல்லா கமேனியின் மரணம் ஈரான் மக்களை ஒரு தேசமாக எழ வைத்துள்ளது. எனவே தரையில் ஒரு எதிர்ப்போ அல்லது நடைவடிக்கையோ இன்றி ஒரு ஆட்சிமாற்த்தை அங்கு ஏற்படுத்த முடியாது.
ஈரான் 17 நாடுகளை தொடர்ந்து தாக்கி வந்தாலும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை தவிர எந்த ஒரு நாடும் ஈரானை திருப்பித் தாக்க துணியவில்லை. அதுவும் ஈரானுக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகின்றது.
ரஷ்யர்கள் நான்கு ஆண்டுகளில் உக்ரைனில் சுமார் 200,000 டன் ஏவுகணைகள், குண்டுகள் மற்றும் ட்ரோன்களை செலவிட்டுள்ளனர். அமெரிக்க-இஸ்ரேல் கூட்டணி ஈரானில் சராசரியாக நாள் ஒன்றிற்கு 1,000 டன் குண்டுகளை வீசுகிறது, மேலும் அதை அதிகரிப்பது போரை வெல்ல முடியாது, உக்ரைனில் ரஷ்யா பெற்ற அனுபவம் மற்றும் ஆப்கானிஸ்தான் மற்றும் வியட்நாமில் இருந்து பெற்ற பாடங்களின் அடிப்படையில் அது சாத்தியமில்லை.
தற்போதைய நெருக்கடியான நிலையில்கூட ஈரான் இதுவரையில் வடகொரியாவிடமோ அல்லது ரஸ்யா விடமோ உதவியை கேட்கவில்லை. தன்னால் சமாளிக்க முடியும் என ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி கூறுகின்றார். ஈரான் கடுமையான சேதங்களை சந்தித்து வருகின்றது. அதன் கடற்படை பல கப்பல்களை இழந்துள்ளது, வான்படை முற்றாக முடக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்பரப்பில் இந்தியாவின் துணையுடன் அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல் மேற்கொண்ட தாக்குத லில் 148 ஈரானிய கடற்படையினர் கொல்லப்பட்டதும் அந்த நாடு சந்தித்த இழப்புக்களில் முக்கியமானது.
எனினும் ஒரு சமச்சீரற்ற களமுனையில் அவை முக்கியமற்றவை. உக்ரைன் போரில் முதல் சில நாட்களில் உக்ரைனின் வான்படை, கடற்படை மற்றும் டாங்கிப்படை அனைத்தும் ரஸ்யாவால் முடக்கப்பட்டது. ஆனாலும் நான்கு ஆண்டுகளாக போர் தொடர்கின்றது.
ஆனால் ஈரான் போரை பொறுத்தவரையில் அது ஏற்படுத்தும் பொருளாதார அழுத்தங்கள் தான் ஒரு வாரத்
திற்குள் உலகம் அதன் வலியை உணர வைத்துள்ளது. எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் தொடர்ந்து உயரும், அதிக எரிபொருள் மற்றும் சரக்கு செலவுகள் பணவீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் அழுத்தத்தை ஏற் படுத்துகின்றன. மத்திய கிழக்குப் பிராந்தியம் முழுவதும் உள்ள தொழில்கள் பெரும்பாலும் மூடப்பட்டுள்ளன, மேலும் வளைகுடா நாடுகளில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து வெளிநாட்டு தொழிலாளர்களும் ஏற்கனவே வெளியேற்றப் பட்டுள்ளனர்.
மேலும் பொருளாதார ரீதியாக முக்கியமான நடவடிக்கைகள் முழுமையாக சீர்குலைந்தவுடன், அவர்கள் ஹார்முஸ் ஜலசந்தியில் முற்றுகையை தொடருவார்கள். அதற்கு ஏற்றாற்போல முதல் முதலில் கடலில் செல்லும் தற்கொலைப் படகு மூலம் அமெரிக்காவின் எரிவாயுக் கப்பலை தாக்கியுள்ளனர். அதாவது கடல் போக்குவரத்து எதிர்வரும் வாரங்களில் பூஜ்ஜியமாகும்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் குறைந்த பலன்களைக் கொண்ட மிகவும் விலையுயர்ந்த தந்திரோபாயப் போரை நடத்துகின்றனர், அதே நேரத்தில் ஈரானியர்கள் ஜல சந்தியை தங்கள் கைகளில் வைத்திருக்கிறார்கள்.
அமெரிக்க அரசாங்கத்தின் மீதான தொடர்ச்சியான அரசியல் மற்றும் பொருளாதார அழுத்தம் அவர்கள் போரிலிருந்து வெளியேற முடியாத சூழ்நிலையை உருவாக்கியுள்ளது, இதுதோல்வியின் அவமானத்தால் மட்டுமல்ல, இந்த தோல்வி ஈரானுக்கு அதன் அணுவாயுதப் பாதைக்கான தடைகளை அகற்றிவிடும்.
ஐந்து நாட்கள் போருக்குப் பிறகும், ஈரான் இன்னும் அதன் அனைத்து திறன்களையும் தக்க வைத்துக் கொண்டுள்ளது, சில சீரழிந்தவை, ஆனால் அனைத்தும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. ஈரான் 35-40 ஆண்டுகளாக மொபைல் ஏவுகணைகளை தயாரித்து சேமித்து வருகிறது. அவர்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரேலை அடையக்கூடிய ஏவுகணைகளையும் தயாரித்து வருகின்றனர், நிலத்தடி தளங்களில் வைக்கப்பட்டுள்ளன.
காணொளிகளில், 30-40 ஏவுகணைகளுக்கு மேல் அழிக்கப்பட்டதையே பார்க்க முடிகின்றது, அதிலும் எத்தனை உண்மையானவை மற்றும் எத்தனை போலியானவை என்பது தெரியாது. அமெரிக்காவுக்கு தற்போது உள்ள தெரிவு தொடர்ந்து குண்டுகளை வீசுவதுதான், அதே நேரத்தில் நிதிச் சந்தைகள் ஈரானை விட பெரிய எதிரியாக மாறிவருகின்றன. ஈரானுக்கு முன்னர் அவை தான் இந்த போரை முடிக்கலாம்.



