ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இறுதி நேரத்தில் ரத்து செய்திருந்தார், ஏனென்றால் இஸ்ரேலின் மற்றும் மேற்குலக நாடுகளின் உளவு அமைப்புக்களின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட ஆயுதக் கிளர்ச்சியை ஈரான் எதிர்பார்த்ததை விட சிறப்பாகக் கையாண்டுள்ளது.
இது குடியரசின் முடிவு என்று இஸ்ரேல் 100% நினைத்தது. அவர்கள் பல்லாயிரக்கணக்கான மொசாட் இரட்டை முகவர்கள் மற்றும் ஆயுதங்கள், தொழில்நுட்பத்தால் ஈரானை ஆக்கிரமித்திருந்தனர். ஈரானுக்குள் 40,000 ஸ்ரார் லிங் செயற்கைக்கோள் இணையத்தள உபகரணங்க ளும் கொண்டுசெல்லப்பட்டிருந்தன. அதற்காக அவர்கள் தமது வளங்கள் அனைத்தையும் செயல்படுத்தினர். ஆனால் ஈரான் அவர்களைத் தடுப்பதற்கு மட்டுமல்லாமல், அவர்களை அடையாளம் கண்டு அவர்களின் முழு நெட்வொர்க்கு களையும் விரைவாக மூடுவதற்கு ஒரு வழியைக் கண்டு பிடித்திருந்தது.
ஈரானின் இந்த வெற்றி இஸ்ரேலுக்கு பேரழிவு தரும். ஈரான் அதனைச் செய்யும் என அவர்கள் நினைக்க வில்லை. ஈரான் தங்கள் நாட்டிற்குள் இருந்த பல முக்கியமான இஸ்ரேலிய சொத்துக்களை அழித்த பிறகு இஸ்ரேல் முழு பீதியில் இருப்பதாக முன்னாள் ஐ.நா. ஆயுத ஆய்வாளர் கூறுகிறார். ஈரான் தங்கள் எல்லைக்குள் செயல்படும் மொசாட் ஊடுருவல்காரர்களை பிடித்து தூக்கிலிட்டதாக அவர் கூறுகிறார். அவரைப் பொறுத்தவரை, இஸ்ரேலின் கடைசி நம்பிக்கை ஜனாதிபதி டிரம்பை நேரடி தாக்குதலை நடத்த அழுத்தம் கொடுப்பதாகும், அதை ட்றம்ப் தற்போது தாமதப்படுத்தி வருகிறார். இது இஸ்ரேலின் முக்கிய நடவடிக்கையாக கருதப்பட்டது, ஆனால் அது வியக்கத்தக்க வகையில் தோல்வியடைந்துள்ளது.
ஜனவரி 8, ஈரானில் தாக்குதலுக்குத் தயாராகும் உயர் பயிற்சி பெற்ற தனிநபர்கள் குழு (பெரும்பாலும் மொசாட்) ஆயுதங்களை ஏற்றுவது, ஆடைகளுக்குள் துப்பாக்கிகளை மறைப்பது மற்றும் வெளிநாட்டு உளவுத்துறை நிறுவனங்களுடன் தொடர்புடையதாக நம்பப் படும் செயற்கைக்கோள் தகவல்தொடர்புகளைப் பயன் படுத்துவது போன்ற காட்சிகளை ஈரான் வெளியிட்டுள்ளது. அதனை அவர்கள் ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்களுக்கும் காண்பித்துள்ளனர். அதாவது இது அமெரிக்காவும், மேற்குலக ஊடகங்களும் கூறுவதுபோல அமைதியா ஜனநாயகப் போராட்டம் அல்ல, இது ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் வெளிநாட்டு உளவு அமைப்புக்களால் வடிவ மைக்கப்பட்ட போராட்டம் என ஈரான் தெரிவித்துள்ளது.
இந்த போரட்டத்தை ஈரான் வெற்றிகரமாக முறி யடித்ததைத் தொடர்ந்து அரபு நாடுகள் மற்றும் இஸ்ரேலின் வேண்டுகோளின் பேரில், ஈரானை தாக்கும் திட்டங்களை காலவரையின்றி ஒத்திவைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இந்த பின்வாங்கலுக்கு 3 முக்கிய காரணிகள் உள்ளன.
ஒன்று இஸ்ரேல் மற்றும் வளகுடாவில் உள்ள அமெரிக்க தளங்களை நோக்கி பறக்கும் ஈரானின் ஏவுகணைகளை தடுப்பதற்கு இஸ்ரேலிடமும், அமெரிக்கா விடமும் முற்றான பாதுகாப்பு பொறிமுறைகள் இல்லை. அது கடந்த வருடம் இடம்பெற்ற 12 நாள் போரில் தெளிவாக உணரப்பட்டிருந்தது.
ஐ.ஆர்.ஜி.சி எட்டு இஸ்ரேலிய விமானத் தளங் கள் மற்றும் இராணுவத் தளங்களை நேரடியான இலக்கா கக் கொண்ட ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை நிலை நிறுத்தக்கூடும் என்று ஈரானிய உளவுத்துறையின் அறிக் கைகள் கூறுகின்றன. ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளின் பெருமளவிலான பயன்பாடு இஸ்ரேலுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் வேகம் மற்றும் அதன் பாதை காரணமாக அவற்றை இடைமறிப்பது கடினம்.
இரண்டாவது ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படும், இதனால் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளுக்கு பெரும் இழப்பு ஏற்படும். ஒபேக் நாடுகளின் 72% எரிபொருட்கள் இந்த வழியால் தான் செல்கின்றன. அதாவது நாள் ஒன்றிற்கு 20 மில்லியன் பரல்கள் எண்ணை இந்த வழியால் செல்கின்றது. உலகின் கடல் வழியிலான எரிபொருள் வர்த்தகத்தில் இரு 25% ஆகும். கடந்த வருடம் இடம்பெற்ற 12 நாள் போரில் ஈரான் அதனை மூடவில்லை ஆனால் இந்த முறை அதனை அவர்கள் மூடலாம்.
மூன்றாவது பிராந்தியத்தில் அரபு நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களின் பயன்பாடும், ஆயுதங்களும் போதுமானதாக இல்லை. கட்டார், சவுதி மற்றும் ஈராக் போன்ற நாடுகள் தமது நாடுகளை தாக்குதலுக்கு பயன்படுத்த மறுப்பும் தெரிவித்திருந்தன. அதாவது ஈரான் குறிப்பிடத்தக்க அளவில் பலம் பொருந்திய நாடு..12 நாள் போரில், ஈரானிய கடற்படை மோதலில் இருந்து விலகி இருந்தது, ஆனால் இன்று, தாக்குதல் ஆட்சி மாற்றத்தை இலக்காகக் கொண்டதாக இருக்கும் என்பதை அறிந்த ஈரானியர்கள் தங்களிடம் உள்ள அனைத்தையும் பயன் படுத்துவார்கள்.
அந்த 12 நாட்களில் அவர்கள் நடைமுறையில் தங்கள் ஆயுதக் களஞ்சியத்தில் உள்ளவற்றில் அதிகமாக எதையும் இழக்கவில்லை; நீண்ட தூர ஆயுதங்கள் கூட அழிக்கப்படவில்லை. விமானம் முதல் நீண்ட தூர பேட்டரிகள் வரை அனைத்தையும் அவர்கள் மறைத்து வைத்திருந்தனர். போரின் பின்னர் அவர்கள் தாம் பயன்படுத்தியதற்கு மேலதிகமாக தயாரித்தும் உள்ளனர். எனவே அவர்கள் தங்களிடம் உள்ள அனைத்தையும் கொண்டு போராடுவார்கள்.
அவர்களிடம் மூன்று முதன்மையான கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் உள்ளன: அபு மஹ்தி, தலாய்யே மற்றும் காதர்-380 (காதர்-380). மூன்றும் 1,000–1,700 கிமீ தூர வீச்சைக் கொண்டவை. அது ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதற்கு மட்டுமல்ல, ஏடன் வளைகுடாவிலும் அரேபிய கடலின் ஒரு பகுதியிலும் தாக்குதல் நடத்த போதுமானது, அவ்வாறு நடந்தால் சந்தைகளில் குழப்பத்தை ஏற்படுத்தி, முக்கிய உலகளாவிய வர்த்தக பாதையை ஆபத்தில் தள்ளும்.
ஈரான் போன்ற நன்கு ஆயுத பலம் கொண்ட 90 மில்லியன் மக்கள் வசிக்கும் ஒரு நாடு, வெளிப்புற முகவர்கள் ஒரே இரவில் தாக்கி அதன் அரசாங்கத்தை மாற்ற முடிவு செய்யக்கூடிய ஒன்றல்ல. 50 ஆண்டுகளுக்கும் மேலாக, CIA மற்றும் மொசாட் ஆகியவை ஈரானிய அரசாங்கத்தை வீழ்த்த முயற்சித்தும் வெற்றி பெறவில்லை. மேற்குலகத்தின் பொருளாதார அழுத்தங்களால் இப்போது ஆட்சி ஒரு பலவீனமான மற்றும், மக்கள் அழுத்தத்தின் கீழ் உள்ளது.ஆனால் நாம் ஈரானைப் பற்றி பேசும்போது, அதற்கான சீன மற்றும் ரஸ்ய உதவிகளை மறக்க முடியாது.
அதாவது தற்போதைய ஆட்சி மாற்ற நடவடிக்கை அதிகாரப்பூர்வமாக ஒரு தோல்வி. உண்மை என்ன வென்றால், பெரிய அளவிலான தாக்குதல் ஆட்சியை உயிர்வாழும் நிலைக்குத் தள்ளிவிடும், ஈரான் தான் தப்பிப் பிழைப்பதற்காக இஸ்ரேலைத் தாக்கும், அமெரிக்க தளங்களைத் தாக்கும், கப்பல் போக்குவரத்தை மூடும், உலகளாவிய சந்தைகளை நிறுத்தும். ஆனால் அமெரிக்கா வும் இஸ்ரேலும் இந்த வாய்ப்பை அவ்வளவு எளிதில் கடந்து செல்ல அனுமதிக்காது. தொடர்ந்து முயற்சி செய்வார்கள், பலவீனமான நிலைகளைத் தேடுவார்கள்.
ஈரானில் நடந்த போராட்டங்களின் போது ஆயுத ஊடுருவல் மற்றும் குழுக்களை ஒழுங்கமைப்பது நீண்ட காலமாக தீர்க்கப்படாத ஒரு பிரச்சினையை வெளிப் படுத்துகிறது. 12 நாள் போரில் ரேடார்கள் மற்றும் வான் பாதுகாப்புகளை முடக்குவதில் மொசாட்டின் பங்கு மிக முக்கியமானது, ஆனால் அது மட்டும் அல்ல. இஸ்ரேலியர் கள் ஈரானுக்குள் ட்ரோன் இயக்க தொழிற்சாலைகளைக் கொண்டிருந்தனர், இதன் விளைவாக ஏராளமான படைத் தளபதிகள் மற்றும் அரசாங்க படையினர் கொல்லப் பட்டனர். சில எதிர்ப்பாளர் குழுக்கள் எவ்வளவு எளிதாக ஆயுதம் ஏந்தி ஒழுங்கமைக்கப்பட்டன என்பதைக் கருதும் போது, வெளிநாட்டு உளவுத்துறை சேவைகள் ஈரானில் தீவிரமாக செயல்படுகின்றன என்பது தெளிவானது.
இது ஈரானின் வான் பாதுகாப்புக்கு ஒரு பிரச்சனை: ட்ரோன்கள் அல்லது சிறிய ஏவுகணைகள் மூலம், எந்தவொரு பாதுகாப்பு அமைப்பு அல்லது ரேடாரையும் பல நூறு கிலோமீட்டர் தொலைவில் இருந்து தாக்க முடியும். இது ஜூன் மாதத்தில் நடந்திருந்தது. வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ரேடார்களைச் சுற்றி வலுவான சுற்றளவு பாதுகாப்பின் தேவை பற்றி தற்பொது ஈரான் எச்சரிக்கையாக இருக்கின்றது.
எனவே தான் இந்த கலவரங்களைத் தொடர்ந்து, ஈரானிய பாதுகாப்புப் படைகள் நாடு தழுவிய விரிவான தேடுதலைத் தொடங்கியுள்ளன. மொசாட் தொடர்பான முகவர்களைத் தேடும் பணியை ஈரானிய எதிர் உளவுத்துறை நாடு தழுவிய அளவில் தொடங்கியுள்ளது. ஈரானின் தற் போதைய முதன்மையான பணி அதுவாக தான் உள்ளது. ஏனெனில் ஈரானை உள்ளிருந்து மட்டுமே வீழ்த்த முடியும்.



