கடந்த இரு வார காலமாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில், லெபனானில் இதுவரை 127 குழந்தைகள், 261 பெண்கள் உள்பட 2,000-க்கும் மேற்போட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என லெபனானின் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஈரான் மீது தாக்குதல் நடத்தினால், தெஹ்ரானின் ‘பதிலடி முந்தையதை விட வலுவாக இருக்கும்’ என்று ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சி (Abbas Araghchi) இஸ்ரேலை எச்சரித்துள்ளார்.
தற்போது, லெபனானில் இஸ்ரேல் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியிருப்பது போர்ப் பதற்றத்தை மேலும் கூட்டியுள்ளது.
