இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் இதுவரை வெற்றியே பெறாத தலைவர் ….

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் நடந்து முடிந்து நிலையில், புதிய ஜனாதிபதியாக அனுர குமார திசநாயக்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த  ஜனாதிபதித்  தேர்தலில், ரணில் விக்ரமசிங்க வெறும் 17 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்துள்ளார்.

இலங்கை அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத தலைவராக இருக்கும் ரணில் விக்ரமசிங்க, 1977ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சி சார்பில் பாராளுமன்றத்தில் தேர்வு செய்யப்பட்டார். பல்வேறு துறைகளின் அமைச்சராகவும், பிரதமராகவும்,  ஜனாதிபதியாகவும் ரணில் விக்ரமசிங்க பதவி வகித்துள்ளார்.

பலமுறை இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க, நடப்பாண்டு தேர்தலுடன் சேர்த்து இதுவரை 3 முறை ஜனாதிபதி  பதவிக்கு போட்டியிட்டுள்ளார். 1999, 2005, 2024 ஆகிய 3 ஆண்டுகளில் போட்டியிட்ட அவர், 3 தேர்தல்களிலும் படுதோல்வியை சந்தித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியால் மக்கள் போராட்டங்கள் வெடித்த போது, கோட்டாபஜ  ராஜபக்சே தனது  ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்தார். அப்போது, பிரதமர் பதவியில் இருந்த ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக  நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.