இலங்கை – இந்திய ஊடக நட்புறவு சங்கத்தின் https://slimfa.lk/ எனும் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை திங்கட்கிழமை (14) இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆரம்பித்து வைத்தார்.
இலங்கை – இந்திய ஊடக நட்புறவு சங்கத்தின் பொதுக்கூட்டம் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தில் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்தில் புதிய உறுப்பினர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டதோடு, இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கிடையேயான ஊடக ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றி கலந்துரையாடப்பட்டன.
2024 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி இலங்கை – இந்திய ஊடக நட்புறவு சங்கம் ஸ்தாபிக்கப்பட்டது.
இலங்கை இந்திய ஊடக நட்புறவு சங்கம் இரு நாடுகளுக்கும் இடையிலான ஊடகத்துறை சார்ந்த உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்துடன் இது உருவாக்கப்பட்டது.