இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்லவே தேர்தலில் போட்டியிடுகின்றேன்: ஜனாதிபதி ரணில்

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லவே தான் சுயேட்சை வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக ஜனாதிபதி ரணில் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமு ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களுடன் இன்று (31) நடைபெற்ற சந்திப்பில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்

மேலும் புதிய நோக்குடனும் புதிய வேலைத் திட்டத்துடனும் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லவே தான் சுயேட்சை வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாகவும் மாகாண சபைகள், மத்திய அரசாங்கம் உட்பட 10 நிர்வாகக் கட்டமைப்பின் ஊடாக நாட்டை அபிவிருத்திக்கு இட்டுச் செல்வதற்கு அர்ப்பணிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.