உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இன்று வெள்ளிக்கிழமை (4) இலங்கைக்கு வருகை தருகிறார்.
பிரதமர் நரேந்திர மோடியுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோரும் இலங்கை விஜயத்தில் பங்கேற்கின்றனர்.
இந்த விஜயத்தின்போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் 8 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதுடன், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் பிரதமர் நரேந்திர மோடியும் ஒப்பந்தங்கள் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்புகள் குறித்து கூட்டறிவித்தலை வெளியிடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.



