இலங்கையுடனான பணியாளர்கள் மட்ட உடன்படிக்கையை உறுதிப்படுத்தியது சர்வதேச நாணய நிதியம் !

இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையே பணியாளர்கள் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி, நான்காவது மதிப்பாய்வை சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அங்கீகரிக்குமாயின் இலங்கைக்கு மேலும் 334 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கப் பெறும் என சர்வதேச நாணய நிதியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் திட்ட செயல்திறன் வலுவாக உள்ளதாகவும்;, பொருளாதார வளர்ச்சி எழுச்சி பெற்றுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் வருவாய் திரட்டல், கையிருப்பு குவிப்பு மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் என்பன எதிர்பார்த்தப்படி முன்னேறி வருவதாகவும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.