இலங்கையில் கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் தற்போது ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இலங்கையில் 30,000 பாலியல் தொழிலாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மருத்துவர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டில் சுமார் 80,000 ஓரினச்சேர்க்கையாளர்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய பாலியல் நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு தனது சமீபத்திய தரவுகளில் இதனைத் தெரிவித்துள்ளது.