பேரழிவின் வலிமை – முழுமையான அழிவு இந்த புயல் எந்த அளவுக்கு சேதங்களை ஏற் படுத்தியுள்ளது?
இந்த புயல் ஒரு சாதாரண சூறாவளியின் தாக்கம் அல்ல. மக்கள் பொதுவாக புயல் என்றால் காற்று மரங்களை முறித்துவீழ்த்தும், சில வீடுகளின் கூரைகளை பிய்க்கும்—அவ் வளவு தான் நினைப்பார்கள். ஆனால் இம்முறை ஏற்பட்டதுமுற்றிலும் வேறுவிதமான ஒரு அழிவு. நான் 1978ஆம் ஆண்டு ஏற்பட்ட புயலை குழந்தையாக அனுபவித்திருக்கிறேன். அப்போது மரங்களே அதிகமாக விழுந்தன; மக்கள் அதில் இருந்து பெரும்பாலும் உயிர் தப்பினர். ஆனால் இம்முறைஇயற்கை நம்மை மன்னிக்காமல் கொடூரமாக தாக்கியுள்ளது. காற்று, வெள்ளப்பெருக்கு, மண்சரிவு—இந்த மூன்று பேரழிவுகளும் ஒன்றாக இணைந்து, ஒரு நாட்டின் வாழ்க்கை அமைப்பையே சிதறடித்துவிட்டன.
பல மாவட்டங்களில் முழு கிராமங்கள் நீரில் மூழ்கி, வீடுகள் சுவரோடு சுவர் கரைந்து விழுந்தன. சில வீடுகள் நீரில்முழுக்க மூழ்கி, கூரையின் மேல் மட்டுமே மக்கள் நின்று கத்தி உதவி கேட்டு கொண்டு இருந்தார்கள். சில இடங்களில்மக்கள் பல மணி நேரங்கள் குழந்தைகளைக் கைகளை உயர்த்தி தூக்கி, கீழே நீரில் அடிபடாமல்பாதுகாத்திருக்கிறார் கள். நான் நேரடியாக பார்த்தேன்—குடும்பம் ஒன்றே படகுக்காக காத்திருந்தது, அவர்களால்எதையும் காப்பாற்ற முடியவில்லை: ஆடைகள், ஆவணங்கள், சாமான்கள், மின் சாதனங்கள்—எதுவும் இல்லை; அவர்கள் உயிரோடு நின்றதை மட்டுமே காப்பாற்ற முடிந்தது.
அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை குறித்து சொல்லுங்கள்.
அரசாங்க தகவல்படி 410 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் இந்த எண்ணிக்கை முழுமையானது அல்ல. 336 பேர் காணாமல் உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் மண்சரிவு அடித்த பகுதிகளில், மண்மற்றும் கற்கள் மற்றும் வீட்டு இடிபாடுகளுக்குள் புதைந்து இருக்கலாம். மீட்புப் பணியாளர்கள் சில இடங்களில் இன்றுவரை போகவே முடியவில்லை. மலைச்சரிவு தடுப்புப் பகுதிகள் இன்னும் நிலைகுலைந்து இருக்கின்றன; அங்கேநிற்கவே முடியாது.
ஒரு தந்தை தனது மனைவியையும் இரு குழந்தைகளையும் கையில் பிடித்திருந்த நிலையில் அவர்களை வெள்ளம் இழுத்துச் சென்ற சம்பவம் நேரடியாகக் கேட்க நேரிட்டது. “நான்அவர்களை காப்பாற்ற முடியவில்லை” என்ற ஒரே வாக்கி யத்தை மட்டுமே கூறினான். அப்படிப்பட்ட நெஞ்சைசிதைக்கும் கதைகள் ஏராளம்.
இப்போது மக்கள் எதிர்கொள்ளும் உடனடி சிரமங்கள் என்ன?
மின்சாரம் பல இடங்களில் இன்னும் கிடைக்க வில்லை. மின்சாரம் இல்லாததால் நீர்பம்புகள் இயங்காது; எனவேகுடிநீர் கடுமையான தட்டுப் பாடு. மக்கள் தண்ணீர் வாங்க வரிசை யில் நிற்கிறார்கள். நீர் கிடைத்தாலும் சுத்தமில்லா நீராகவே இருக்கின்றது; நோய்கள் பரவும் நிலை. சில இடங்களில் குழந்தைகள் வயிற்றுப்போக்கால் மருத்துவமுகாம்களுக்கு கொண்டு செல்லப் பட்டனர். மருத்துவமனைகளில் கூட மின்சாரம் இல்லாத நிலை இருந்தது.
செயல்பாடுகள் மீண்டும் எப்போது தொடங்கும் என நம்பப்படுகிறதா?
சாலைகள் வெள்ளத்தில் கரைந்து போய் விட்டன. திருகோணமலை – மூதூர் மேம்பாலம் உடைந்து சாலைமுழுவதுமாக நதியாக ஓடு கிறது. மன்னம்பிட்டி சாலை மூன்று நாட்கள் முற்றிலும் முடங்கியது. நாங்கள் உலருணவு எடுத்துச்செல்லும்போது டிராக்டர் பயன்படுத்த வேண்டியிருந்தது. இன்னும் பல இடங்களில் மக்கள் “எங்களை காப்பாற்றயாராவது வருவார்களா?” என்று காத்திருக்கிறார்கள்.
பலர் இதை 2004 ஆழிப்பேரலையுடன் ஒப்பிடு கிறார்கள். உங்கள் பார்வை என்ன?
ஆழிப்பேரலை உயிரிழப்பின் எண்ணிக்கையில் மிகப்பெரியது; ஆனால் அது ஒரு குறிப்பிட்ட கடற்கரைப் பகுதிக்குமட்டும் பாதிப்பை ஏற் படுத்தியது. இந்த பேரழிவு முழு இலங்கையையும் தாக்கியது—உயிர்கள் மட்டுமல்ல, வீடுகள், தொழில்கள், வேளாண்மை, கட்டமைப்பு, அரசு நிர்வாகம்—ஒன்றும் இயங்கவில்லை.
இதன் தாக்கம் குறைந்தது அடுத்த பத்து ஆண்டுகளுக்கு இலங்கையின் பொருளா தாரத்தையே மாற்றி விடும்.
இச்சூழ்நிலையில் கூட தமிழர் நிலத்தை அபகரிப்பதற்கு முயற்சிகள் நடைபெறுகின்றன என்பது குறித்த குற்றச்சாட்டுபற்றி சொல்லுங்கள்.
ஆம், அது மிகப் பெரிய உண்மை. வடகிழக்கில் பௌத்த விகாரைகள் மற்றும் புத்தர் சிலைகள் பேரழிவு வந்தாலும், மக்கள் இறந்தாலும், வெள்ளத்தில் வீடுகள் மூழ்கினாலும் கூட நிறுத்தப்படவில்லை. சஜித் பிரேமதாசா வடக்கு–கிழக்கில் 1000 விகாரைகள் கட்டும் திட்டத்தை முன்னெடுத்தவர். குருந்தூர் மலை விகாரைக்கு எதிராக நீதிமன்றம்தடை கொடுத்திருந்தும், அதை மீறி வேலைகள் மேற்கொள்ளப்பட்டது. அந்த உத்தரவை வழங்கிய நீதிபதி பின்னர்மர்மமாக காணாமல் போனார். இது விளக்கமில்லாத மற்றும் மிகப்பெரிய அபாயம் கொண்ட நிகழ்வு.
தொல்லியல் திணைக்களம், வனத்துறை என்ற பெயரில் நிலங்களை கைப்பற்றுகிறார்கள். பிறகு புத்தர் சிலைவைக்கப்படுகிறது; அதற்குப் பிறகு விகாரை; அதன் பிறகு அந்த பிரதேசம் முழுவதும் பௌத்த துறவிகளின் ஆட்சி. தமிழர் நில உரிமைகள், குடியேற்றம், வரலாறு—all erased.
தமிழ் அரசியல்வாதிகள் இந்த சூழ்நிலையிலிருந்து என்ன கற்றுக்கொண்டுள்ளனர்?
கற்றுக்கொள்ளவில்லை. பல தடவைகள் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். சஜித்திற்கு ஆதரவாக ஓடி பேசியவர்கள்இன்று எதிராக பேசுகிறார்கள். இது தமிழர் அரசியலின் மிகப் பெரிய துரதிர்ஷ்டம். இன உணர்வும் வரலாற்றுஉண்மையும் இல்லாத தலைமைகளால் மக்கள் அழிவதையே அனுபவிக்கிறார்கள். தமிழ் மக்கள் அதிகவிழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய காலம் இது.



