ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நான்கு நாள் உத்தியோகபூர்வ பயணமாக சீனா சென்றுள்ள நிலையில், இந்தப் பயணத்தில் இலங்கைக்கு கிடைத்த பாரிய முதலீட்டு வாய்ப்பொன்று கிடைக்கப்பெற்றுள்ளது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
இந்த வாய்ப்பின் ஊடாக இலங்கையில் சீனா 3.7 பில்லியன் டொலர்களை நேரடியாக முதலீடு செய்ய உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதற்கான ஒப்பந்தம் இலங்கை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுக்கும் சீனாவின் சினோபெக் முன்னணி சர்வதேச பெற்றோலிய நிறுவனத்திற்கும் இடையில் கைசாத்திடும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



