இலங்கையில் காணாமல்போனவர்களின் குடும்பங்கள் துன்புறுத்தப்படுகின்றன – மனித உரிமை கண்காணிப்பகம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை இலங்கை அரசாங்கம் தொடர்ந்து துன்புறுத்துவதாக சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம்சாட்டியுள்ளது.

சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் மேலும் தெரிவித்துள்ளதாவது,

பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பு மிரட்டல் பொய்யான குற்றச்சாட்டுகள் வன்முறை மற்றும் தன்னிச்சையான கைதுகள் மூலம் குடும்பங்களை தொடர்ந்து துன்புறுத்துகின்றனர்.

ஆகஸ்ட் 29 2024 அன்று திருகோணமலையில் உள்ள நீதிமன்றம் ஆகஸ்ட் 30 அன்று பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினத்தைக் குறிக்கும் வகையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஊர்வலம் நடத்துவதைத் தடை செய்யுமாறு பொலிஸாரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டது எனக்குறிப்பிட்டுள்ளது.

மேலும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் அன்றாட வேதனையை அனுபவிக்கிறார்கள்.இதற்கு காரணமான அரச அமைப்புகள் அவர்களை மௌனமாக்க முயற்சி செய்கின்றன  என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான துணை இயக்குநர் மீனாட்சி கங்குலி கூறினார்.

“நூற்றுக்கணக்கான தாய்மார்கள் மனைவிகள் மற்றும் பலர் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியாமலேயே காலமானார்கள். மேலும் பலர் நீதியைப் பார்க்க அவர்கள் வாழ மாட்டார்கள் என்ற அச்சத்தை வெளிப்படுத்துகிறார்கள்.”என அவர் தெரிவித்தார்.