இலங்கையின் வெளியுறவுக் கொள்கை குறித்து அமைச்சர் விஜித ஹேரத் கருத்து

இலங்கையின் வெளியுறவுக் கொள்கையானது வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மேம்பாடு மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தி, பொருளாதார இராஜதந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு உறுதியாக அமைந்துள்ளது என வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

வியாழக்கிழமை (5) நடைபெற்ற COYLE இராஜதந்திரிகளின் நிகழ்வில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர்  விஜித ஹேரத் இதனை தெரிவித்தார்.

அமைச்சர்  விஜித ஹேரத் மேலம் தெரிவிக்கையில்,

வெளிநாடுகளில் உள்ள இலங்கையின் தூதரகங்கள் ஏற்றுமதியை ஊக்குவித்தல், நேரடி வெளிநாட்டு முதலீடுகளை (FDI) ஈர்த்தல், சுற்றுலாத்துறைக்கு ஆதரவளித்தல் மற்றும் தொழில்நுட்ப மற்றும் அறிவுப் பரிமாற்றத்தை எளிதாக்குதல் ஆகியவற்றில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

புதிய வாய்ப்புகளைத் திறப்பதற்கும் உலகளாவிய சந்தைகளை அணுகுவதற்கும் இராஜதந்திரமும் தொழில்முயற்சியும் கைகோர்த்துச் செயல்பட வேண்டும்.