இலங்கையின் விசேட தூதுக்குழு, இந்திய வெளியுறவுச் செயலாளர் இடையே சந்திப்பு

24 பேர் கொண்ட இலங்கை தூதுக்குழு இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரிஸை சந்தித்து கலந்துரையாடியுள்ளது.

இரு தரப்புக்கும் இடையிலான ஆழமான உறவுகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.  14 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 24 பேர் கொண்ட இலங்கை தூதுக்குழு இரண்டு வார கால விஜயம் மேற்கொண்டு நேற்று (15) இந்தியாவை சென்றடைந்தது.

இந்திய – இலங்கை கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான பங்களிப்பை இந்திய வெளியுறவுச் செயலாளர் இந்த சந்திப்பின் போது வலியுறுத்தியுள்ளார். அத்துடன் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட பிராந்திய புவிசார் அரசியல் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.