இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கு இந்திய, பிரதமர் வாழ்த்து

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள அனுரகுமாரதிசநாயக்கவிற்கு இந்திய பிரதமர் நரேந்திரமோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் உங்களின் வெற்றிக்கு எனது பாராட்டுக்கள்,இந்தியாவின் அயல்நாடுகளிற்கு முன்னுரிமை விசன் சாகர் கொள்கையில் இந்தியா இலங்கைக்கு முதலிடத்தை அளித்துள்ளது என இந்திய பிரதமர் தெரிவித்துள்ளார்.

எங்கள் மக்களினதும் பிராந்தியத்தினதும் நன்மைக்காக எங்களின் பல்தரப்பட்ட ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்காக உங்களுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.