இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் 1 மில்லியன் டொலர் (299 மில்லியன் ரூபா) பெறுமதியான கதிர்வீச்சு மற்றும் இரசாயனங்களை கண்டறியும் அதிநவீன கருவியினை இலங்கைக் கடற்படைக்கு வழங்கியுள்ளது.
தனது கடல்சார் களத்தில்அணு, கதிரியக்க மற்றும் இரசாயன அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து அதற்கான பதிலளிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான இலங்கையின் திறனை குறிப்பிடத்தக்க அளவில் இதுஅதிகரிக்கிறது.
அமெரிக்க சக்தி திணைக்களத்தின் தேசிய அணுசக்தி பாதுகாப்பு நிர்வாகம்
(DOE/NNSA) மற்றும் அதன் அணுக்கடத்தல் கண்டறிதல் மற்றும் தடுப்பு அலுவலகத்தினால்விநியோகிக்கப்பட்
இதில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் மற்றும் இலங்கைக் கடற்படையின்கட்டளைத்தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தியப் பெருங்கடலுக்குச் செல்லல், கப்பல்களில்/படகுகளில் ஏறுதல், தேடுதல்களைமேற்கொள்ளல் மற்றும் பறிமுதல் செய்தல் போன்ற நடவடிக்கைகளை (VBSS)மேற்கொள்வதற்கான இலங்கைக் கடற்படையின் திறனை மேம்படுத்தும் அதேவேளை நாட்டின் துறைமுகங்கள் மற்றும் கடல் வழிகளைப் பாதுகாத்து, அபாயகரமான இரசாயன, கதிரியக்கமற்றும் அணுசக்தி பொருட்களைக் கண்டறிந்து இடைமறிப்பதற்கான அதன் திறனையும்இவ்வுபகரணம் பலப்படுத்துகிறது.
“இலங்கையின் கடல் எல்லைகளைப் பாதுகாப்பதற்கும், முழுப் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் இம்மேம்பட்ட கருவியானது ஒரு இன்றியமையாத சாதனமாக அமையும்.” என இவ்வைபவத்தில் கலந்துகொண்ட இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் தெரிவித்தார்.



