இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம் – அமெரிக்க தூதுவரின் கருத்துக்கு ரஷ்யா பதில்

இணையவழி பாதுகாப்பு யோசனைக் கட்டுப்பாடுகள் என்பது இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினை எனவும் இதில் வெளிநாட்டு சக்திகளின் தலையீடு முற்றிலும் பொருத்தமற்றது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் ரஷ்ய தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

இணையவழி பாதுகாப்பு யோசனைக்குறித்து அமெரிக்க தூதுவர் ஜூலி சங் வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் இதனை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இலங்கை அரசியலில் சர்ச்சையை தோற்றுவித்துள்ள இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் தொடர்பில் கொழும்பில் உள்ள ரஷ்ய தூதுவர் லெவன் டழகர்யன் புவிசார் அரசியல் விவாதத்தை ஆரம்பித்துள்ளார்.

“இலங்கையின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இலங்கையின் இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் தொடர்பான விடயங்களை ரஷ்யா கவனித்து வருகிறது.

உள்நாட்டு அரசியல் மற்றும் இலங்கையில் அங்கீகாரம் பெற்ற வெளிநாட்டு சக்திகள் மத்தியில் இருந்து வரும் அனைத்து கருத்துக்கள் மற்றும் எதிர்வினைகளையும் ரஷ்யா கவனிக்கிறது என்று கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.