இலங்கையின் 14 அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் அரசியல் தலைவர்கள் 24 பேர் உள்ளிட்ட பேராளர்கள் கடந்த 14ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை இந்தியாவுக்கான விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
இந்த பேராளர்களில் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபைகளின் முன்னாள் உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், இளைஞர் அணி தலைவர்கள் உள்வாங்கப்பட்டிருந்தனர்.
இரு நாடுகளினதும் பல்வேறு மட்டங்களையும் சேர்ந்த கட்சிகளிடையிலான அரசியல் தொடர்புகளை மேம்படுத்தும் நோக்குடன் முதல் தடவையாக நடைபெற்ற நிகழ்ச்சித் திட்டம் இதுவாகும்.
இக்குழுவினர் இந்தியாவின் டில்லி – NCR, மற்றும் பீகார், கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு விஜயம் மேற்கொண்டிருந்ததுடன் இந்த விஜயத்தின் மூலமாக இந்தியாவின் அபிவிருத்தி செயற்றிட்டங்கள், பொருளாதார நவீனத்துவம், தொழில்நுட்ப முன்னேற்றங்கள், ஜனநாயக பாரம்பரியங்கள் மற்றும் அதன் செழிப்பான கலாசார மரபு ஆகியவை குறித்த கலந்துரையாடியுள்ளனர்.