“இலங்கைக்கான எனது ஐந்தாண்டு பணி”: ரணிலின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

2024 ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின்   “இலங்கைக்கான எனது ஐந்தாண்டு பணி” என்ற தலைப்பிலான தேர்தல் விஞ்ஞாபனம் வெளியாகியுள்ளது.

‘இந்த ஜனாதிபதித் தேர்தல், இலங்கைக்கு நிலையான மற்றும் வளமான எதிர்காலத்தை அடைவதற்கு அல்லது குழப்பம் மற்றும் நிலைக்குத் திரும்புவதற்கு இடையிலான தெரிவாகும், இலங்கையர்கள் சிரமங்களை எதிர்கொள்வதை நான் அறிவேன். ஆனால் இந்த பயணத்தில் நாம் நீண்ட தூரத்தை கடந்திருக்கிறோம்’ என   ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மேலும் 2022 நெருக்கடிக்குப் பிறகு நாங்கள் சரியான பாதையில் செல்கிறோம். இந்த பயணத்தின் அடுத்த 5 வருடத்திற்கான திட்டம் என்னிடம் மட்டுமே உள்ளது. உங்கள் வாக்கு மூலம் ஒருங்கிணைந்த இலங்கையை பிரகாசமான மற்றும் நிலையான எதிர்காலத்திற்கு கொண்டு செல்வேன். இலங்கையில் ஊழல் – மோசடிகளை ஒழிக்க புதிய சட்டங்களை கொண்டுவர உள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை எதிர்வரும் 5 ஆண்டுகளில் கட்டியெழுப்பும் மற்றும் மக்களின் வறுமையை ஒழிப்பதற்கான விடயங்களை தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில்  பட்டியலிட்டுள்ளார்.

அத்தோடு கொள்கைப் பிரகடனம் தொடர்பில் அறிந்து கொள்வதற்காக www.ranil2024.lk எனும் இணையத்தளமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.