இன்றைய காலகட்டத்தில் சமூக ஊடகங்கள் செய்தி களாக பதிவு செய்யும் பல விடயங்களில்…
இளம் பராயத்தினரின் துர் மரணங்கள் இல்லாத நாளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இது பெரும் துன்பியலான விடயமாக இருக்கிறது. அதிலும் தற் கொலை மரணங்கள் செய்திகளாக ஒரு பக்கம் நிரப் பீடு செய்கின்றன.
ஒரு சமூக விருட்சத்தின் கிளைகளான இளவய தினரின் இழப்பு என்பது… அந்தச் சமூகத்தின் ஆணி வேரையே ஆட்டம் காண வைக்கிறது. “இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள்” என்ற வார்த்தைகள் பெரும் இடைவெளியை ஏற்படுத்திக் விடுமோ என்ற பயம் மனதில் எழுகின்றது.
தற்கொலைகளைத் தூண்டும் பலவிதமான செயற்பாடுகளை இந்தச் சமூகம் கொண்டிருக்கிறது. சின் னச் சின்ன விடயங்களில் கூட சிந்தித்து முடிவை எடுக்கத் தெரியாமலும்… சாதாரண விடயங்களை எதிர் கொள்ளத் முடியாமலும் இந்த இளம் பராயத்தினர் இருக்கிறார்கள் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. இதனை நாம் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்.
பரபரப்பான வாழ்க்கை முறையினால் பெரியவர் களுக்கும் இளையவர்களுக்கும் இடையேயான தொடர் பாடல்கள் குறைந்த வண்ணமே இருக்கின்றன. நல்ல கருத்துக்களை நற்சிந்தனைகளை ஆன்மீக உணர்வை ஏற்படுத்தும் பெரியவர்களின் கருத்துக்களை புறம் தள் ளும் மனப்போக்கு நம் இளையோரிடம் காணப்படும் ஆரோக்கியம் அற்ற நிலையாக இருக்கிறது.
அத்தோடு தற்கால சட்ட திட்டங்கள், வாழ்வியல் மாற்றங்கள் மற்றும் தனிமைப் பட்ட இலத்திரனியல் பாவனை இவை எல்லாம் கூட இம் மரணங்கள் அதிகரிக்க காரணமாக அமைகிறது என்று சொன்னால் மிகையாகாது.
தற்போதைய பிள்ளைகளின் ஆடம்பரமான வாழ்க்கை முறை அவர்களின் எதிர்பார்ப்பு நிறைந்த மனவியலை அதிகப் படுத்துகிறது. ஒரு விடயத்தை அடைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி நிற்கிறது. சில எதிர்பார்ப்புகள் நிறைவேறாத பட்சத்தில் அடுத்த நிலைக்கு மனம் முடிவெடுக்கும் இயல்பை இழந்து விடுகின்றது. இதுவும் ஒரு காரணம் என்றே கருத வேண்டும்.
இப்போதெல்லாம் சேர்ந்து வாழும் வாழ்க்கை முறை சிதறி விட்டது. பிள்ளைகள் மனச் சோர்வு, சஞ்சலம் அடையும் போதெல்லாம்.. அவர்கள் அருகில் இருந்து அரவணைக்க ஆறுதல் கூற பெரியவர்கள் இல்லாத வீடாக பலரது குடும்ப நிலை காணப்படுகிறது.
சரியான நேரத்தில் பிள்ளைகளை கவனிக்க, அவர்களோடு நல்ல விடயங்களை எடுத்துச் சொல்ல அவசியம் பெரியவர்கள் இருக்க வேண்டும். அத்தோடு அவர்களின் துர் மரணத்தில் குறிப்பிட்ட விகிதம் சமூகமும் காரணப் பட்டு இருக்கிறது. சில பிள்ளைகள் சமூகத்தை எதிர் கொள்ளத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.
ஆகவே இதில் நாம் கவனத்தில் கொள்ள வேண் டிய விடயம் என்னவென்றால்… எப்படி இந்தப் போக்கு அதிகரித்தது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
அதிலிருந்து பிள்ளைகளை காப்பாற்ற நாம் என்ன செய்ய முடியும் என முனைதல் வேண்டும்.
பிள்ளைகளின் வளர்ப்பு முறைகளில் பெற் றோரின் பங்கு மட்டும் அல்ல சட்டங்களும், சூழ் நிலைக ளும் சாதகமாக இருக்க வேண்டும். அப்போது தான் மாற்றமும் ஏற்படும். எங்கள் பழைய வாழ்வியலை என்று தொலைத்தோமோ? இன்று நாம் அதன் பலனை அனு பவிக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
இந்த நவீன உலகத்தில் மனித வாழ்வியலின் வளர்ச்சி பல தொழில் நுட்ப விடயங்களால் ஆளப் பட்டு முன்னேற்றம் காண முற்படும் வேளை.. அதே தொழில்நுட்பம் மனிதனின் மனவலுவை குறைத்துள்ளதா? மனித வாழ்வியலை பாதிக்கின்றனவா? என்றும் நினைக்கத் தோன்றுகின்றது.
இந்த நிலையை மாற்ற என்ன செய்யப் போகின்றோம் என்று… நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். ஏனெனில் இது ஒவ்வொரு குடும்பம் சார்ந்த பிரச்சினையாகவும் இருக்கிறது. அதுவே பரந்து நல்ல சமூக நிலையை உடைக்கின்றது. முயன்றால் பாதிப்பை ஒரளவு குறைக்கலாம். இதனை மனதில் நிறுத்தி எங்கள் வீட்டில் இருந்தே நாம் மாற்று முயற்சிக்கான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.
“முயல்வோம் மாற்றத்தைக் காண முயற்சி செய்வோம்.”



