இன்றிரவு இலங்கை வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்களை ஒன்றாக நாளைய தினம் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.
கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெறும். இதில், பங்கேற்க தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்களுக்கு தனித்தனியாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அறியவருகின்றது.
எனினும், அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கும் சந்திப்புக்கான நேரம் மாலை 5.00 மணி என்றே வழங்கப்பட்டுள்ளது என்று தெரிய வருகின்றது.
நாளைய சந்திப்பில் தமிழ் அரசு கட்சியின் சார்பில் அந்தக் கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் த. சித்தார்த்தன், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி. விக்னேஸ்வரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் இந்த சந்திப்பில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
இந்த சந்திப்பில், தமிழ் மக்களின் பிரச்னைக்கான தீர்வு, ஜனாதிபதித் தேர்தல் மற்றும் சமகால அரசியல் தொடர்பில் பேசப்பட வாய்ப்பு உள்ளது.
அதேவேளையில் இந்திய வெளிவிவகார அமைச்சா் நாட்டின் வடக்கு கிக்குப் பகுதிகளுக்கும் செல்வாா் என எதிா்பாா்க்கப்படுகின்றது.