இனப்படுகொலைக்கு சர்வதேச பொறுப்புக்கூறலை வலியுறுத்தி அவுஸ்திரேலியாவில் போராட்டம்!

அவுஸ்திரேலியாவில் உள்ள அனைத்து ஈழதமிழர் அமைப்புககள் தமிழ் ஈழத்தில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச பொறுப்புக்கூறலை வலியுறுத்தி 21ம் திகதி பேரணியொன்றை முன்னெடுக்கவுள்ளன. என தமிழ் ஏதிலிகள் பேரவை தெரிவித்துள்ளது

அந்த அமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

செம்மணி மனித புதைகுழியில் ஆதாரங்கள் மீண்டும் கிடைக்கத்தொடங்கியுள்ளதை தொடர்ந்தே அவுஸ்திரேலியாவில் உள்ள ஈழதமிழர் அமைப்புகள் இந்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.

அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை தூதரகத்திற்கு வெளியே ஆரம்பமாகவுள்ள இந்த பேரணி ஐநா அலுவலகத்தை நோக்கியும் பல நாடுகளின் தூதரகத்தை நோக்கியும் செல்லவுள்ளது.

1996 இல் முதலில் தெரியவந்த செம்மணிமனித புதைகுழிகளில் 1990களின் பிற்பகுதியில் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் பொதுமக்களின் மனித எச்சங்கள் காணப்படுகின்றன.

2025 இல் இடம்பெறும் சமீபத்தைய விசாரணைகளும் பொது அறிக்கைகளும் சர்வதேச தடையவியல்  தலையீட்டிற்கானவேண்டுகோள்களை மீண்டும் புதுப்பித்துள்ளன.

புதிய அகழ்வுகளும் கண்ணால் கண்டவர்களின் சாட்சியங்களும் நூற்றுக்கணக்கான உடல்கள்  இன்னமும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் புதைகுழிக்குள் இருக்கலாம்,என்பதை வெளிப்படுத்தியுள்ள நிலையிலேயே சர்வதேச தடையவியல் தலையீட்டிற்கான வேண்டுகோள்கள் மீண்டும் ஒலிக்கத்தொடங்கியுள்ளன.

இந்த புதைகுழிகள் கடந்த காலத்தின் நினைவுச்சின்னங்கள் இல்லை ,இலங்கையில் தொடரும் திட்டமிட்ட முறையில் நிராகரிக்கப்பட்டு வரும் இனப்படுகொலைக்கான நிராகரிக்க முடியாத மறுக்க முடியாத ஆதாரங்கள் .

தற்போது கிடைத்துள்ள ஆதாரங்களை சர்வதேச சமூகத்தின் கதவுகளிற்கு கொண்டு செல்வதே அவுஸ்திரேலிய பேரணியின் நோக்கம்.

இந்த பேரணியின் போது தமிழ் இளைஞர்கள்,உயிர்பிழைத்தவர்கள்,மனித உரிமை பரப்புரையாளர்கள் விசேடமாக தயாரிக்கப்பட் அறிக்கைகள் ஆவணங்களை ஐக்கிய நாடுகளிடமும்  வெளிநாட்டு தூதரகங்களிடமும் கையளிப்பார்கள்.நிகழ்த்தப்பட்டுள்ள அட்டுழியங்களின் அளவையும்,உலகளாவிய பொறுப்புக்கூறலிற்கான அவசர தேவையையும் இந்த ஆவணங்கள் கோடிட்டுக்காட்டும்.

இந்த ஆவணங்கள்

தமிழ் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும்,

செம்மணி மனித புதைகுழி ஏனைய அட்டுழியங்கள் இடம்பெற்ற இடங்களிற்கு சர்வதேச சுயாதீன விசாரணையாளர்கள் செல்வதற்கு இலங்கை அனுமதிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கவேண்டும்

யுத்தகுற்றவாளிகளை நீதியிலிருந்து பாதுகாத்துள்ள இலங்கையின் உள்ளக பொறிமுறைகளிற்கான  ஆதரவை நிறுத்தவேண்டும்.

தமிழர்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் அவர்களின் தாயகத்தை பாதுகாத்தல் ஆகிய வேண்டுகோளிற்கு ஆதரவளிக்க வேண்டும்.ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தவையாக காணப்படும்.

தமிழ் ஏதிலிகள் பேரவையின் உறுப்பினர்கள் இந்த பேரணியில் கலந்துகொள்வார்கள்,அதற்கு ஆதரவளிப்பார்கள்.

தமிழ் அகதிகள் மற்றும் இனப்படுகொலையிலிருந்து தப்பியவர்களை பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்பு என்ற வகையில் அவுஸ்திரேலியாவின் மௌனம் மற்றும் உடந்தை குறித்த எங்களின் ஆழ்ந்த கரிசனையை வெளியிடுகின்றோம்.

இந்த குற்றங்களிற்கு காரணமான ஆட்சியாளர்களிடம் அவுஸ்திரேலியா தொடர்ந்தும் தமிழ் மக்களை நாடு கடத்துகின்றது.ஒடுக்குமுறைகள் தொடர்வதற்கான ஆதாரங்கள் தொடர்ந்து வெளியாகின்ற போதிலும் இது இடம்பெறுகின்றது. அதனை சூழவுள்ள மௌனமும்  குற்றத்தின் ஒரு பகுதியே என தமிழ் ஏதிலிகள் பேரவையின் பேச்சாளர் ரேணுகா இன்பகுமார் தெரிவித்துள்ளார்.