இந்த வருடத்தின் மிகப் பலமான் மிகப் பலமான நாணயமாக மாறிய ரூபிள்

இந்த வருடத்தில் மிகவும் பலம் வாய்ந்த நாணயமாக ரஸ்யாவின் ரூபிள் நாணயம் உள்ளதாக வும், அது தங்கம் மற்றும் அமெரிக்க டொலர்களை விட பலம்பெற்று வருவதாகவும் த புளும்பேர்க் என்ற ஊடகம் கடந்த செவ்வாய்க்கிழமை(15) தெரிவித் துள்ளது.
இந்த வருடத்தில் அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபிள் 38 வீத அதிகரிப்பை கண்டுள்ளது.  இந்த வருடத்தில் உலகில் உள்ள நாணயங்களில் பலமான நாணய மாக அது முன்னேறியுள்ளது.  உலகில் தங்கத்தை விட பாதுகாப் பான நாணயமாக அது மாற்றம் பெற்றுள்ளது.  ஜனவரி மாதத்தில் தங்கம் 23 வீத அதிகரிப்பை கண்டுள்
ளது.  ஆனால் ரூபிள் 38 வீத அதி கரிப்பை கண்டுள்ளது.
பூகோள அரசியல் மற்றும் ரஸ்ய மத்திய வங்கியின் நிதி முகாமைத்துவமே ரூபிளின் இந்த உயர்வுக்கு கார ணம்.  ஏனைய வளர்ந்துவரும் பொருளாதார நாடுகளுடன் ஒப்பிடும்போது ரூபிள் மீதான முதலீட்டு வெளியேற்ற அழுத்தம் குறைவானது.  அது ரூபிளுக்கு பாதுகாப்பு கேடயமாக உள்ளது என தெரிவித்துள்ளார். முதலீட்டு நிறுவனத்தின் பொருளியல் நிபுணர் சொப்யா டொனற்ஸ்.
கடந்த ஒக்டோபர் மாதம் பணவீக்கத்தை குறைப்பதற்காக ரஸ்யா தனது வட்டி விகிதத்தை 21 விகிதமாக உயர்த்தியிருந்தது.  மேலும் ஏற்றுமதியாளர்கள் தமது வருமானத்தில் ஒரு பகுதியை ரூபிளாக மாற்றவேண்டும் என்ற சட்டத்தையும் கொண்டுவந்திருந்தது.  மேற்கு லகத்தின் தடையை முறியடிப்பதற்காக ரஸ்யா அதனை மேற்கொண்டிருந்தது.
அதேசமயம், அமெரிக்காவுக்கும் ரஸ்யாவுக்கும் இடையிலான நெருக்கமும் ரஸ்யாவை நோக்கி முதலீட்டாளர்களை கவர்ந்துள்ளது.  ஆனால் அமெரிக்க டொலர் கடுமையான வீழ்ச்சியை கண்டுவருகின்றது.  ட்றம்பின் வரி அறிவிப்பே அதற்கு காரணம் என தெரிவிக் கப்படுகின்றது.