இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன், கட்சியின் தவிசாளர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இன்று நடைபெற்றுள்ளது.
குறித்த சந்திப்பில் நாட்டின் தற்போதைய அரசியல் முன்னேற்றங்கள் மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த பிற பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.