யாழ்ப்பாணத்துக்கு தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் ஷா. நவாஸை வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பிரதிநிதிகள் இன்று (22) யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.
யாழ்ப்பாணம், தெல்லிப்பழையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
அதன்போது, இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்துமாறு கோரியதோடு, அத்துமீறல்களால் வட மாகாண மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், நட்டங்கள் தொடர்பாகவும் சட்டமன்ற உறுப்பினரிடம் வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தினர் எடுத்துக் கூறியுள்ளனர்.



