இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்

“ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் விரை​வில் இந்​திய பயணம் மேற்​கொள்ள இருக்​கிறார். அதற்​கான ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்டு வரு​கின்​றன” என்று ரஷ்ய வெளி​யுறவுத் துறை அமைச்​சர் செர்ஜி லாவ்​ரோவ் தெரி​வித்​துள்​ளார்.

ரஷ்ய சர்​வ​தேச விவ​கார கவுன்​சில் (ஆர்​ஐஏசி) சார்​பில், “ரஷ்யா – இந்​தியா : புதிய இருதரப்பு கொள்​கை” என்ற தலைப்​பில் கடந்த புதன்​கிழமை மாநாடு நடை​பெற்​றது. இந்த மாநாட்​டில் ரஷ்ய வெளி​யுறவுத் துறை அமைச்​சர் செர்ஜி லாவ்​ரோவ் பங்​கேற்​றார். அதன்​பின்​னர் தொலைக்​காட்​சிக்கு அளித்த பேட்​டி​யில் கூறிய​தாவது:

இந்​தி​யா​வில் 3-வது முறை பிரதம​ராகத் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட பிறகு, முதல் நாடாக ரஷ்​யா​வுக்கு நரேந்​திர மோடி வந்​தார். அப்போது, இந்​தி​யா​வுக்கு வரவேண்​டும் என்று அதிபர் புதினுக்கு அழைப்பு விடுத்​தார். பிரதமர் மோடி​யின் அழைப்பை ஏற்று அதிபர் புதின் விரை​வில் இந்​திய பயணம் மேற்​கொள்ள இருக்​கிறார்” என்றார்.