2025 ஆம் ஆண்டின் முதல் 04 மாதங்களுக்கான அரச செலவினங்களை மேற்கொள்வதற்கான இடைக்கால நிதி நிலை அறிக்கை இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
பிரதமர் ஹரினி அமரசூரிய, இடைக்கால நிதி நிலை அறிக்கையை நாடாளுமன்றில் சமர்ப்பித்ததுடன், இன்றும் நாளையும் இடைக்கால நிதி நிலை அறிக்கை மீது விவாதம் நடைபெறும்.
நாளை மாலை வாக்கெடுப்பு இடம்பெற்று நிறைவேற்றப்பட உள்ளது.
இடைக்கால நிதி நிலை அறிக்கையை தயாரிப்பது தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு கடந்த நவம்பர் 25ஆம் திகதி அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
மேலும், சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தின் திருத்தப்பட்ட விதிமுறைகள் எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படும் என சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.