இலங்கையை அச்சுறுத்திக் கொண்டிருந்த பெங்கால் (Fengal) புயல், தமிழகத்தை நோக்கிச் சென்றுவிட்டது. ஆனால், இரண்டு வாரங்களுக்கு மேலாகத் தொடரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக உருவாகிய பெரு மழை இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளிலேயே அதிகளவுக்கு சேதங் களை ஏற்படுத்திச் சென்றிருக்கின்றது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருமாறி, வடக்கு கிழக்கில் பாரிய அழிவுகளை ஏற்படுத்தலாம் என எதிா்வுகூறப்பட்ட போதிலும், அது திசைமாறிச் சென்றுவிட்டது.
புயல் தாக்கவில்லை என்றாலும், தொடா்ந்த பெரு மழை வடக்கு கிழக்கு உட்பட நாட்டில் பாரிய சேதங்களை ஏற்படுத்திச் சென்றிருக்கின்றது.
இதற்கு முன்னரும் இது போன்ற இயற்கை அனா்த்தங்களை இலங்கை எதிா்கொண்டிருக் கின்றது. ஆனால், இப்போது இவ்வாறான அனா்த் தம் ஒன்று வரப்போகின்றது என்பது முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது. இவ்வாறு அறிவிக்கப்படட்டு, முன்னாயத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், இழப்புக்கள் அதிகமாகவே இருந்துள் ளது.
புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த உடனடியாகவே இந்த கால நிலை சீா்கேட்டை எதிா் கொள்ள வேண்டிய நிா்ப்பந்தம் அதற்கு ஏற் பட்டிருக்கின்றது. புயல் இலங்கையைக் கடந்து சென்றுவிட்டதாகச் சொல்லப்படுகின்றது. புயல் அபாயம் நீங்கியிருந்தாலும் கூட, பெரு மழை காரணமாக ஏற்பட்டிருக்கும் பாதிப்புக்களிலிருந்து இலகுவாக மக்கள் மீண்டுவிட முடியாது. அந்த ளவுக்கு கடுமையான பாதிப்புக்களை இந்த பெரு மழை ஏற்படுத்தியிருக்கின்றது.
போதிய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டி ருந்தும் கூட பாதிப்புக்களுக்கு காரணம் என்ன என்பது ஆராயப்பட வேண்டும். இதற்கு மூன்று காரணங்கள் சொல்லப்படுகின்றன. வடக்கு, கிழக்கில் பெருமளவு கட்டுமானங்கள் திட்டமிடாத முறையில் – அவசர கோலத்தில் அமைக்கப்பட்டிருப்பதும், அவை இயற்கையாக உள்ள வடிகால் அமைப்புக்களை சீர்குலைக்கும் வகையில் இருப்பதும் அதிகளவு பாதிப்புக்களுக்கு முதலாவது காரணம்.
கட்டங்கள் பல சட்டவிரோதமாகக் கட் டப்பட்டுள்ளன. அவ்வாறான கட்டங்களை உடனடியாக இடிக்குமாறு வடமாகாண ஆளுநா் நா.தேவநாயகன் உத்தரவிட்டிருக்கின்றாா். இந்தக் கட்டங்களில் பெரும்பாலானவை வெள்ளவாய்க் கால்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ளன. வெள்ளம் வடிந்தோடாமல் இருப்பதற்கு வெள்ள வாய்க்கால்களை ஆக்கிரமித்து சட்டவிரோத கட்ட டங்கள் அமைக்கப்பட்டுள்ளமையும் காரணம் எனச் சுட்டிக்காட்டிய ஆளுநர், அவற்றை அகற்ற துரித நடவடிக்கை எடுக்குமாறும் பணித்தார்நகரப் பகுதிகளிலுள்ள பெரும்பாலான கான்கள் துா்வாரப்படாமல் அல்லது துப்புரவு செய்யப்படாமல் உள்ளன. அவை மழை நீா் கடலை நோக்கி, அல்லது நீா்நிலைகளை நோக்கிச் சென்றடைவதை தடுத்துக்கொண்டுள்ளன. அத
னால், வீடுகளுக்குள் வெள்ளம் வருவது தவிா்க்க முடியாததாகிவிட்டது. அதனை விட, முன்னெச் சரிக்கையை மக்கள் கண்டுகொள்ளாதத தும் அதனை அலட்சியப்படுத்தியமையும்கூட, அதிக பாதிப்புக்கள் ஏற்பட்டமைக்கு அடுத்த காரணம்.
கடந்த 23 ஆம் திகதி வங்காள விரிகுடாவில் தோற்றம் பெற்ற காற்றழுத்த தாழ்வு நிலை பின்னா் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, கிழக்கு மாகாணத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி பின்னா் அங்கிருந்து, வடக்கு நோக்கி நகா்ந்தது. இது கன மழையாக தாக்கியது. இது தொடா்பான எச்சரிக்கைகள் ஒரு வாரத்துக்கு முன்னரே விடுக்கப்பட்டது. “பெங்கால்” என்ற புயலாக இது மாற்றமடையும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
வடமாகாணத்தைப் பொறுத்தவரையில், ஆளுநா் வேதநாயகன் உடனடியாகவே சகல துறை களையும் சோ்ந்தவா்களை அழைத்து முன்னாயத்த மாநாடு ஒன்றை நடத்தியிருந்தாா். அதன் பின்னரும் ஆளுநரும், அரசாங்க அதிபா்களும் உருவாகக்கூடிய நிலைமைகளைச் சமாளிப்பதற்கான முன்னாயத்த ஏற்பாடுகளை போா்க்கால அடிப்படையில் செய்திருந்தாா்கள்.
“வழமையாக வடகீழ் பருவக்காற்று காலங்களில் வங்காள விரிகுடாவில் தோன்றும் தாழமுக்கம் மற்றும் புயல்களின் நகர்வுப் பாதையை ஒரளவு தெளிவாக கணிக்க முடியும்” என்று குறிப்பிடும் யாழ். பல்கலைக்கழக புவியியல் துறைத் தலைவா் கலாநிதி நாகமுத்து பேரின்பராஜா, “ஆனால் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வுப் பாதையை தெளிவாக கணிக்க முடியவில்லை” என்றும், “அத்தோடு இதன் கரையைக் கடக்கும் இடம் தெளிவாகவில்லை” என்றும் தெரிவித்திருந்தாா்.
“தொடர்ச்சியாக கிடைத்து வருகின்ற கனமழை காரணமாகவும் குளங்களினுடைய மேலதிகமான உபரி நீர் வான் பாய்வதன் காரணமாகவும் வடக்கு, மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும், குறிப்பாக மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட் டங்களில் வெள்ள அனர்த்தத்திற்கான வாய்ப்பு கள் மிக உயர்வாகவே காணப்படுகின்றன”என்ற எச்சரிக்கையையும் அவா் வெளியிட்டிருந்தாா்.
முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தும், முன்னாயத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டிருந்தும் கூட பல இடங்களில் பாதிப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றது. குறிப்பாக யாழ். நகரப் பகுதியில் அதிகளவு பாதிப்புக்களைக் காண முடிந்தது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவ மனைக்குள் கூட வெள்ளம் புகுந்தமையால், அதன் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டிருந்தன.
யாழ் நகரப் பகுதிகளில் திட்டமிடப்படாத கட்டுமானங்களால்தான் இந்த நிலை ஏற்பட்டது. ஒரு மதிலைக் கட்டும்போது அதில் மழை நீா் வழிந்தோடுவதற்கான இடம் விடப்பட வேண் டும். ஆனால், பெருமளவு கட்டுமானங்கள் இயற்கையாகவே அமைந்திருக்கும் வடிகால்களை அடைத்துவிட்டது. யாழ். நகரப் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த வடிகால்கள் நிரம்பிவிட்ட நிலையைக் காணமுடிகின்றது.
முன்னெச்சரிக்கை காரணமாக அதிக ளவு பாதிப்புக்கள் தடுக்கப்பட்டது. அரசாங்க அதிகாரிகளும் இவ்விடயத்தில் உரிய நேரத்தில் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்தாா் கள். அத்துடன் மக்களும் விழிப்புடன் செயற் பட்டமையால் அதிகளவு பாதிப்புக்கள் தவிா்க் கப்பட்டது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இலங்கையின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கடும் மழை பெய்துள்ளது. இதனால் சுற்றியுள்ள கடல் மற்றும் தரைப் பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. வட மாகாணத்தின் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ந்து கடும் மழை பெய்துள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதிகளின் பல்வேறு இடங்களில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
தொடர்மழை காரணமாக இலங்கை முழுவதிலும், ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த எண்ணிக்கை தொடா்ந்தும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. மரக்கறிகளின் விலைகள் அதிகரிக்கும் ஆபத்துள்ளது. வயல் நிலங்களும் பல அழிவடைந்துள்ளன. இதனால், எதிா் காலத்தில் அரிசிக்கும் பெரும்தட்டுப்பாடு ஏற் படப்போகின்றது.
வன்னிப் பிரதேசத்திலுள்ள அனைத்து குளங்களுமே வான்பாயத் தொடங்கியிருந்தன. அதனைவிட பெரும்பாலான குளங்களின் வான் கதவுகளும் திறந்து விடப்பட்டன. கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்கள் இதனால் அதிகளவு பாதிப்பை எதிா்கொள்கின்றன.
கிளிநொச்சியில் உள்ள மிகப்பெரிய குளமான இரணைமடுக்குளத்தின் வான்கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன. இது குறித்த அவசர அறிவிப்பு ஒன்றை கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு நேற்று வெளியிட்டிருந்தது.
“இரணைமடு குளத்தினுடைய நீர்மட்ட மானது 34 அடியை தாண்டியுள்ளது. அத்தோடு வான் கதவுகள் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டு கொண்டிருக்கின்றது” என்றும், “மாங்குளம் வவுனியா பகுதிகளில் அதிகளவான மழை வீழ்ச்சி கிடைக்கப்பெற்று வருவதனால் அதிகளவான நீர் வந்து கொண்டிருப்பதால் மக்கள் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும்” என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இது தொடா்பான அறிவித்தல்களை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. குளங்க ளுக்கான நிரேந்து பிரதேசங்களில் கடுமையான மழை பெய்திருப்பதால், எதிா்பாராத அளவுக்கு குளங்களில் நீா் நிரம்புவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. காட்டுப் பகுதிகளில் கொட்டும் கன மழையும் இந்தக் குளங்களை நிரப்புகின்றது. அதனால், அது தொடா்பான முன்னறிவிப்புக்களையிட்டு மக்கள் அவதானமாக இருப்பது அவசியம்.
சில அழிவுகளைத் தடுத்துவிட முடி யாது என்பது உண்மை. உதாரணமாக பயிா் இழப்புக்களை எதிா்கொள்வது கடினம். ஆனால், மக்களுடைய இழப்புக்கள், அழிவுகளை சமாளித் திருக்க முடியும். ஆனால், எம்மவா்கள் ஆறு பெருக் கெடுத்த பின்னா்தான் அதற்கு அணை போட முயல்கின்றாா்கள்.



