ஆபிரிக்க நாடுகளுக்கு சீனா 50 பில்லியன் டொலர்களை வழங்கியது

ஆபிரிக்க நாடுகளின் அபி விருத்தித் திட்டத்திற்கு சீனா 50 பில்லியன் டொலர்களை வழங்கவுள்ளதாக சீனாவின் தலை நகர் பிஜங்கில் இடம்பெறும் 3 நாள் பொருளாதார மாநாட்டில் பேசும் போது சீன அதிபர் சி ஜின் பிங் கடந்த வியாழக்கிழமை(5)  தெரி வித்துள்ளார்.

சீன-ஆபிரிக்க கூட்டமைப் பின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய் யப்பட்டிருந்த இந்த மாநாட்டில் 50 இற்கு மேற்பட்ட ஆபிரிக்க நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண் டிருந்தனர். அண்மைக்காலங்களில் நிகழந்த நிகழ்வுகளில் இது மிகப் பெரும் நிகழ்வு என சீனாவின் வெளிவிவகார அமைச்சகம் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள் ளது.

கடந்த 70 ஆண்டுகளாக ஆபிரிக்க நாடுக ளுடன் சீனா உறவு களை வளர்த்து வருகின்றது. ஆனால் அது தற்போது மிகவும் உச்சத்தில் உள்ளது. அது தற்போது மூலோபாய உறவுகளாக பரிணாமம் பெற்றுள்ளது. விவசாயம், பாது காப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் சூழல் மாசு படாத எரிசக்தி துறைகளில் முதலீடுகள் மேற் கொள்ளப்படுவதுடன் இரு தரப்பும் இணைந்தும் பணியாற்றும்.

அவசர உணவுத்திட்ட உதவியாக ஒரு பில்லியன் டொலர்களை சீனா ஆபிரிக்க நாடுகளுக்கு வழங்கவுள்ளது. 6,670 ஹெக்டயர் பகுதியில் விவசாண அபிவிருத்திகளை மேற் கொள்வதற்கு சீனா 500 விவசாயத்துறை நிபுணர்களை ஆபிரிக்காவுக்கு அனுப்பவுள்ளது. ஆபிரிக்காவில்விவசாய தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்கு சீனா உதவும்.

எதிர்வரும் 3 வருடத்திற்குள் 50.6 பில்லியன் டொலர்கள் செலவில் ஆபிரிக்க நாடுகளில் 10 அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக் கப்படவுள்ளன என சீன அதிபர் பேசும் போது தெரிவித்துள்ளார். இதனிடையே சீன அதிபர் 50 ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளையும் தனித்தனியாக சந்தித்தும் உரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2021 ஆம் ஆண்டு இடம்பெற்ற மாநாட்டில் ஆபிரிக்க நாடுகளில் இருந்து 300 பில்லியன் டொலர்கள் பெறுமதியான பொருட்களை இறக்குமதி செய்வதான சீனா உறுதியளித் திருந்தது. ஆனால் இந்த வருடம் இடம்பெறும் மாநாட்டுக்கு முன்னர் சீனா அதனை எட்டி யுள்ளது. தற்போது அதன் இறக்குமதி 305.9 பில்லியன் டொலர்கள் என சீன வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.