அமெரிக்க செனட்டின் வெளியுறவு குழு அதிகாரிகள் இலங்கை வருகை

02182 அமெரிக்க செனட்டின் வெளியுறவு குழு அதிகாரிகள் இலங்கை வருகை
நிகழ்நிலை காப்பு சட்டம் உள்ளிட்ட சட்டங்களுடன் தொடர்புடைய பிரச்னைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக அமெரிக்க செனட் சபையின் வெளியுறவு தொடர்புகள் குழுவின் சிரேஷ்ட தொழில்சார் பணிக் குழாமின் பிரதிநிதிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

நாட்டின் பொருளாதாரம் மற்றும் அரசியல் நிலைமைகள் தொடர்பில் ஆழமான தெளிவை பெற்றுக் கொள்வதற்காக இந்த பிரதிநிதிகள் குழு நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக, அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பிரதிநிதிகள், பொருளாதார மறுசீரமைப்பு தொடர்பில் ஆராயவும், நிகழ்நிலை காப்பு சட்டம் உள்ளிட்ட அண்மைய சட்டங்களுடன் தொடர்புடைய சிக்கல்கள் குறித்து கலந்துரையாடவும் அரச அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்திக்கவுள்ளதாக அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.