மத்திய கிழக்கில் ஈரான், இஸ் ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே தற் போது நடைபெற்று வரும் போர் சூழல், உலக அரசியலில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்தப் போரின் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மைகள், அமெரிக்காவின் போர் வரலாறு மற்றும் ஈரானின் புவிசார் அரசியல் பலம் குறித்து விரிவாக ஆராய்கிறது இந்த நேர்காணல். இதில் ஆய்வாளர் காதர் மாஸ்டர் அவர்கள் கலந்துகொண்டு பல முக் கியத்தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார்.
கேள்வி :
தற்போதைய ஈரான் – இஸ்ரேல் போர் சூழலில் தகவல்கள் எவ்வாறு கையாளப்படுகின்றன? குறிப்பாக இஸ்ரேல் தரப்பில் என்ன நடக்கிறது?
பதில் :
தற்போதைய போர் சூழலில் இஸ்ரேல் அரசு தனது நாட்டு மக்களுக்குக் கடுமையான சட்டங்களைப் பிறப்பித்துள்ளது. போரினால் இஸ்ரேலுக்குள் ஏற்படும் பாதிப்புகள் எவையும் சமூக ஊடகங்களில் வெளியாகக் கூடாது என்றும், மீறுபவர்களுக்குத் தண்டனை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அங்கிருந்து கசியும் தகவல்களின்படி, இஸ்ரேல் காசாவை எவ்வாறு தரைமட்டமாக்கியதோ, அதே போன்ற ஒரு இக்கட்டான நிலையில் தற்போது டெல் அவிவ் நகரம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இந்தப் போரை உண்மையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுதான் ஈரானுக்கு ஏவுகணைகளை அனுப்பித் தொடங்கி வைத்தார். ஆனால், மேற்கத்திய ஊடகங்கள் பலவும் உண்மையை மறைத்து அமெரிக்காவிற்குச் சேவை செய்யும் விதமாகவே செய்திகளை வெளியிடுகின்றன. இன்றைய காலகட்டத்தில் செயற்கைக்கோள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்டதால், போரின் உண்மைகளை முழுமையாக மறைக்க முடியாது என்றாலும், பழைய காணொளிகளை மாற்றி அமைத்துப் போலியான செய்திகளைப் பரப்பும் குழப்பமான நிலையும் நீடிக்கிறது.
கேள்வி :
அமெரிக்காவின் போர் வரலாறு மற்றும் அதன் ஆயுத உற்பத்திப் பின்னணி பற்றி உங்கள் பார்வை என்ன?
பதில் :
அமெரிக்கா இரண்டாவது உலகப் போருக்குப் பின் ஒரு வல்லரசாக உருவெடுத்தது. ஐரோப்பிய நாடுகளுக்கு ஆயுதங்களை விற்ற ஒரு ஆயுத வியாபாரியாகவே அது முன்னுக்கு வந்தது. அமெரிக்காவின் பொருளாதாரம் பெரும்பாலும் ஆயுத உற்பத்தியைச் சார்ந்தே இருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி ஜான்சன் தனது பிரியாவிடை உரையில், ஆயுத உற்பத்தியைத் தனியார் வசம் ஒப்படைத் திருப்பது உலகை எங்கே கொண்டு போய்விடுமோ என்று கவலையோடு எச்சரித்தார்.
அமெரிக்காவின் போர் வரலாற்றைப் பார்த்தால், அவர்கள் கொரியப் போர் முதல் வியட்நாம், ஆப்கானிஸ்தான் என எதிலுமே நேரடியாக மோதி வெற்றி பெற்றதில்லை. ஈராக் போரின் போது ‘உலகை அழிக்கும் அணு ஆயுதங்கள்’ (WMD) இருப்பதாகப் பொய்க் காரணத்தைச் சொல்லியே போரைத் தொடங்கினார்கள்.
அமெரிக்கா பெரும்பாலும் தனது இராணுவ பலத்தால் வெல்வதை விட, சதித்திட்டங்கள் (Conspiracy) மற்றும் ராஜதந்திரம் என்ற பெயரில் மேற்கொள்ளும் சூழ்ச்சிகள் மூலமாகவே சோவியத் யூனியன் சிதைப்பு போன்றவெற்றிகளைப் பெற்றுள்ளது.
கேள்வி :
ஈரானின் பலம் மற்றும் அதன் வரலாற்றுப் பின்னணி என்ன? ஏன் ஈரானை யாராலும் எளிதில் வீழ்த்தமுடியவில்லை?
பதில் :
ஈரானுக்கு 2500 ஆண்டுகள் பழமையான பாரசீக நாகரிக வரலாறு உண்டு. உலகிலேயே முதல் மனித உரிமைச் சாசனமான ‘சைரஸ் சிலிண்டர்’ வழங்கிய பெருமை ஈரானுக்குரியது. புவியியல் ரீதியாக ஈரான் மிகவும் வலிமையானது.
ஜக்ரோஸ் (Zagros) மற்றும் அல்பரோஸ் (Alborz) ஆகிய இரண்டு பிரம்மாண்ட மலைத்தொடர்கள் ஈரானுக்கு இயற்கை அரணாக உள்ளன. இமயமலை போன்ற இந்த மலைகளுக்கு அடியில்தான் அவர்கள் ஆயுதக் கிடங்குகளை வைத்துள்ளனர், எத்தகைய குண்டுகளாலும் அவற்றைத் துளைக்க முடியாது. மேலும், ஈரான் மீது நீண்டகாலமாகத் தடைகள் விதிக்கப்பட்டிருந்தாலும், அவர்களுக்குத் தேவை யான உணவு மற்றும் எரிபொருளை அவர்களே உற்பத்தி செய்து கொள்ள முடிவதால் அவர்களால் தனித்து வாழ முடிகிறது.
சீனா, இந்தியா போன்ற நாடுகளுக்குக் கூட எரி பொருளுக்காக வெளிநாடுகளை நம்ப வேண்டியுள்ளது, ஆனால் ஈரான் உலகிற்கே எரிபொருள் வழங்கும் நாடாக இருக்கிறது. ஈரானை ஆக்கிரமிப்பது என்பது வரலாற்றில் யாராலும் முடியாத காரியமாகவே இருந்து வருகிறது.
கேள்வி :
ஈரானில் மதவாத ஆட்சிக்கும் அதன் தொழில் நுட்ப வளர்ச்சிக்கும் என்ன தொடர்பு?
பதில் :
பொதுவாக மதவாத அரசாங்கங்கள் பிற்போக் கானவை மற்றும் மனித குலத்திற்கு ஆபத்தானவை என் பதில் சந்தேகமில்லை. ஈரானிலும் மதக் கட்டுப்பாடுகள் சுதந்திரத்தை நசுக்குகின்றன. இருப்பினும், ஏனைய மத்திய கிழக்கு நாடுகளுடன் ஒப்பிடும்போது ஈரானில் தேர்தல் முறையும், கல்வி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியும் சிறப்பாக உள்ளன. 1953-இல் ஈரானின் எண்ணெய் வளத் தைக் கொள்ளையடிக்க அமெரிக்காவின் சிஐஏ (CIA) மற்றும் பிரிட்டன் இணைந்து நடத்திய சதிக்குப் பின், ஈரான் தனது தேசிய வளங்களைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது. மதத்தலைவர்கள் ஆட்சியில் இருந்தாலும், அவர்க ளின் பண்டைய பாரசீக வரலாறும் நிர்வாக முறையும் இன்றும் அந்தநாட்டை வலிமையாகக் கொண்டு செல்ல உதவுகின் றன.
கேள்வி :
தற்போதைய போரில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் உத்திகள் என்ன? அவை வெற்றி பெற்றுள்ள னவா?
பதில் :
அமெரிக்காவும் இஸ்ரேலும் வான்வழித் தாக்குதல்களை நடத்தி, ஈரானில் ஒரு கிளர்ச்சியை உண்டாக்கி ஆட்சிமாற்றத்தைக் கொண்டு வரலாம் என்று கணக்கு போட்டன. குறிப்பாக குர்திஷ் மக்களைப் பயன் படுத்தி ஈரானுக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றனர். டொனால்ட் ட்ரம்ப் ஒரு வியாபாரி என்பதால் அவருக்குப் பெரிய அரசியல் பின்னணி இல்லை; அவர் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் பேச்சைக் கேட்டு இந்தப் போருக்கு உடன்பட்டார். ஆனால், முன்புபோல ஈரானுக்குள் ஊடுருவிச் சதி வேலைகளைச் செய்வது தற்போது இஸ்ரேலுக்குக் கடினமாகியுள்ளது.
மேலும், ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் திட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்காமல் தள்ளியே நிற்கின்றன. சைப்ரஸில் உள்ள பிரிட்டிஷ் தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை ஈரான் நடத்தியதாகக்கூறி ஐரோப்பிய நாடுகளைப் போருக் குள் இழுக்கச் சதி நடந்தது, ஆனால் அது ஈரானின் தாக்கு தல் அல்ல என்பது நிரூபிக்கப்பட்டது.
கேள்வி :
இந்தப் போரின் பொருளாதாரத் தாக்கம் மற்றும் எதிர்கால நகர்வுகள் எப்படி இருக்கும்?
பதில் :
இந்தப் போர் அமெரிக்காவிற்குப் பெரும் பொரு ளாதார நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது. ஈரானின் ஒரு ட்ரோன்(Drone) விலை 20,000 டொலர் மட்டுமே, ஆனால் அதைத் தாக்கி அழிக்க அமெரிக்கா பயன்படுத்தும் ஏவுகணையின் விலை 4 மில்லியன் டொலர்கள். இவ் வாறு ஒரு நாளைக்குச் சுமார் 1 பில்லியன் டொலர் வரை அமெரிக்கா செலவு செய்யவேண்டியுள்ளது. ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) முடக்கி உள்ளதால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு ஈரான் அனுமதியளித்துள்ளது. ஈரான் தற் போது தனது தாக்குதல்களைக் குறைத்துக் கொண்டு, நீண்ட காலப்போருக்குத் தயாராகி வருகிறது. ரஷ்யாவிற்கு ஒரு வருடத்தில் 53,000 ட்ரோன்களை விற்பனை செய்யும் அளவுக்கு ஈரானிடம் ஆயுத உற்பத்தி உட்கட்டமைப்பு பலமாக உள்ளது. எனவே, அமெரிக்கா இந்தப் போரில் ஒரு உடனடி இலக்கை அடைய முடியாமல் ஆப்பசைத்த குரங்கு போலத் தவித்துக் கொண்டிருக்கிறது.



