அமெரிக்காவின் வரி தொடர்பில் இலங்கை பிரதிநிதிகள் முன்னெடுத்துள்ள பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரியில் இன்று (23) இடம்பெற்ற பிரசாரக் கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்ககாவில் முன்னெடுத்துள்ள கலந்துரையாடல் வெற்றியளித்துள்ளதாக அங்குள்ள எமது குழு அறிவித்துள்ளது.
அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ள நிதி பிரதி அமைச்சர் உள்ளிட்டோர் அடங்கிய குழு அங்கு நேற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார் அந்த பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இரு தரப்பும் இறுதி இணக்கப்பாட்டுக்கு வந்ததன் பின்னர் கூட்டு அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.