இஸ்ரேல் வான் படையினருக் கான ஆயுதங்களை வழங்குவ தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விதித்த கட்டுப்பாடுகளே இஸ்ரேல்-லெபனான் போர் நிறுத்த திற்கு வழிகோரியது என கட்டார் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹசான் பராரி தெரிவித்துள்ளார்.
கடந்த 14 மாதப்போரில் யாரும் வெற்றிபெறவில்லை, காசா போரை முடிவுக்கு கொண்டுவரும் ஹிஸ்புல்லாக்களின் திட்டம் நிறை வேறவில்லை. மாறாக ஹிஸ்புல்லாக்களை முற்றாக அழிப்பது என்ற இஸ்ரேலின் திட்டமும் நிறைவேறவில்லை. ஹிஸ்புல்லாக் கள் தலைவர் உட்பட பெருமள வான தளபதிகளை இழந்துள்ளனர். இஸ்ரேல் 80 இற்கு மேற்பட்ட படையினரை இழந்துள்ளது. போரில் இஸ்ரேலின் கை மேலோங்கியிருப்பது போலவே தென்படுகின்றது.
லெபனானை அமெரிக்கா வேறு விதமாகவே பார்க்கின்றது. எனவே தான் போர் நிறுத்தத்திற்கான அழுத்தத்தை பிரயோகித்துள் ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, லெபனானில் நிறுத்தப்பட் டுள்ள படையினரை விடுவித்து அவர்களை காசா பகுதியில் பயன்படுத்தும் நோக்கத்துடன் தான் நெத்தனியாகு இந்த போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டுள்ளார் என அல்ஜசீரா ஊடகத்தின் ஆய்வாளர் மாவன் பிசரா தெரிவித்துள்ளார்.
இரு தரப்பும் இந்த போர் நிறுத்தம் தமக்கான வெற்றி என கூறினாலும் இரு தரப்பும் மிகவும் கடுமையான சேதங்களைச் சந்தித்துள்ளனர். போர் நிறுத்தம் அடிப்படைக் காரணிகளை நிறைவுசெய்யவில்லை எனவே இந்த போர் நிறுத்தம் சில வாரங்கள் அல்லது மாதங்களே நீடிக்கும் சாத்தியங்கள் உள்ளன.
தெற்கு லெபனானில் ஊரடங்கு சட்ட த்தை பிறப்பிக்கும் உரிமையை போர் நிறுத்தம் இஸ்ரேலுக்கு வழங்கியுள்ளது. தெற்கு லெபனானில் இருந்து ஹிஸ்புல்லாக்கள் வெளியேறப் போவதும் இல்லை. காசாவில் இடம்பெறும் இனஅழிப்பு போர் முடிவுக்கு வரும்வரையில் நிரந்தர போர் நிறுத்ததிற்கு சாத்தியமில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



