அமெரிக்காவிடமிருந்து மேலும் சலுகைகளை பெறுவதற்கு தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
ஏற்றுமதியாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பொன்றில் கருத்துரைத்த ஜனாதிபதி, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாகவே இலங்கைக்கு விதிக்கப்பட்ட 44 சதவீத தீர்வை வரி, 30 சதவீதமாக குறைக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
அந்த பேச்சுவார்த்தைகளை தொடர்வதன் மூலம் மேலும் சலுகைகளை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரம், வர்த்தகம், வர்த்தக சமூகம் மற்றும் மக்களின் வாழ்க்கைக்கு மிகவும் சாதகமான திருத்தங்களை மேற்கொள்வதே அரசாங்கத்தின் விருப்பம் எனவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
இந்த சந்திப்பின்போது அமெரிக்காவினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய தீர்வை வரிக் கொள்கை தொடர்பான கலந்துரையாடல்களின் முன்னேற்றம் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன், புதிய சந்தை அணுகுமுறைகளை அடையாளம் காண அரசாங்கம் மற்றும் தனியார் துறையும் இணைந்து செயற்படுவதன் அவசியம் மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தலுக்கான வாய்ப்புகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவத்துள்ளது.