அன்னைபூபதியின் 37ம் ஆண்டு நினைவு மாதம் இந்திய பிரதமர் வருகை..! பா.அரியநேத்திரன்

ஓர் இனத்தின் அரசியல் விடிவிற்காகவும் ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கு எதிராகவும் உண்ணா விரதப் போராட்டம் ஒன்றை நடாத்தி, உயிர்த் தியா கம் செய்திட்ட உலகின் முதற் பெண்மணி என்ற வகையிலும் ஒரு சாதாரணக் குடும்பப் பெண் தனது தனிப்பட்ட வாழ்வைத் துறந்து, தனது நாட்டுக்காக முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டம் என்ற வகையிலும் அன்னை பூபதி அவர்களின் போராட்டம் பல விழுமியங்களைத் தொட்டு நிற்கின்றது.
அன்னை பூபதி  ஒரு விடுதலைப் போராளி அல்லர். விடுதலைப் போராளி என்ற வகையில் தியாகி திலீபன் அவர்கள் ஒரு சொட்டு நீரும் அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்து தனது இன்னுயிரை ஈந்திருந்தார்
ஆனால் போராளியாக இல்லாத ஒரு 56 வய தானா சாதாரண குடும்பத் தலைவி – தன்னைத் தன் மக்களுக்காக மட்டுமன்றி, தனது போராளிகளுக்காகவும் தன்னைத் தற்கொடையாக்கிய செயல் என்பதானது ஒரு வரலாற்று நிகழ்ச்சியாகும்மக்களைக் காப்பாற்றுவதற்காகத் தம் உயிரைத் தருகின்ற போராளிகளின் இலட்சியத்திற்காகத் தன் உயிரைத் தாரை வார்க்க முன்வந்த அன்னை பூபதியின் தியாகம் நாட்டுப்பற்றாளர்களின் தியாகத்திற்கும், அர்ப்பணிப்பிற்கும் ஒரு குறியீடாகும் என்ற நோக்கில் தேசிய தலைவர் 2006ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19, ம் நாளை நாட்டுப்பற்றாளர் நாளாக பிரகடனப்படுத்தினார்.
இலங்கை இந்திய ஒப்பந்தம் 1987, யூலை,29, ல் மேற்கொள்ளப்பட்டு எதிர்வரும் 2025, யூலை,29 ம் நாள் 38, வருடங்களை எட்டுகிறது.
அந்த ஒப்பந்தத்தால் ஈழவிடுதலைப் போராட்ட சரித்திரத்தில் இரண்டு உயிர்கள் அறவழிப் போராட்டமான உண்ணாவிரப் போராட்டத்தால் ஈகம் இந்தமண்ணில் நடைபெற்றதுதான் மிச்சம் ஒருவர் விடுதலைப் புலிகளின் வீரனான யாழ் மண் ஈன்ற தியாகி திலிபன் கடந்த 1987, செப்டம்பர்,26,ம் நாள் அடுத்தவர்தான் இந்த தாயார் சாதாரண ஒரு குடும்பத்தலைவியான மட்டக்களப்பு அன்னை பூபதி 1988, ஏப்ரல்,19 .ம் நாள் 37, ஆண்டு நினைவு வணக்க நாளாகும்.
அறப்போராட்டத்தின் வரலாற்றை கற்பித்த பாரதநாடு அந்த நாட்டுப்படைகளுக்கு எதிராக மேற்கொண்ட இருவரின் உயிர் தியாகங்களும் இந்தியாவின் முகத்தில் கரிபூசிய வரலாறாகவே இதனை கொள் ளலாம்.
இன்று இலங்கை இந்திய ஒப்பந்தத்தால் உயிர் நீத்த அன்னை பூபதியின் உண்ணாவிரதம் ஆரம்பித்த 1988, மார்ச்,19 இது 37, ஆண்டுகளை கடந்து அதே நினைவு மாதத்தில்தான் இந்தியப்பிரதமர் மோடி அவர்கள் எதிர்வரும் 2025, ஏப்ரல்,04, ல் இலங்கைக்கு வருகிறார்.
அவரை சில சமயங்களில் சந்திக்கும் தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்கள், பாராளு
மன்ற உறுப்பினர்கள் இந்த வர லாற்றை அவருக்கு கூறவேண்டும். அப்படி கூறக்கூடிய வர்கள் அவரை சந்திப்பார்களா என்பது அடுத்த வினா?  அவர் இலங்கைக்கு வரும் நோக்கம் வேறாக இருந்தாலும் தமிழ் தலைவர்களை சந்திக்கும்போது மீண்டும் அந்த 38, வருடங் களுக்கு முன்பு செய்த ஒப்பந்தத்தையும், 13ம், வாய்ப்பாட்டையும் மீட்டிப் பார்ப்பார்கள். இந்தியப் பிரதமரும் அதனை மனனம் செய்வார் அதுதான் நடக்குமே தவிர வேறு எந்த விமோசனமும் ஈழத்தமிழர்களுக்கு கிடையாது படமும் ஊடக அறிக்கையும் மட்டுமே நாம் கண்ட அநுபவம்.
இதுவரை இலங்கை இந்திய ஓப்பந்தத் தால் இலங்கையில் மாறி மாறி ஆட்சியில் இருந்த ஜனாதிபதிகளான ஜே ஆர் ஜெயவர்தன, ஆர் பிரேமதாச, டீ பி விஜயதுங்க, சந்திரிகா, மகிந்த, மைத்திரி, கோட்டா, ரணில் தற்போதைய அனுராவரை 38, வருடத்தை ஆட்சியில் கழித்த வர்கள் தமிழ்மக்களை ஏமாற்றியதே வரலாறு.
அன்னை பூபதியின் தியாக மரணம் தமிழ் மண் பற்றையும் உண்மையான உறுதியையும் கொண்ட இலட்சியப்பாதையையும் தமிழ் இனத்துக்கு அந்த தாயார் விட்டுச்சென்றுள்ளார். அவ்வாறானவர்களின் தியாகத்தை மறந்து இன்று ஈழத்தேசிய தமிழ் அரசியல் தலைவர்கள் என கூறும் போலி முகங்கள்  தமிழ்த்தேசியத்தை சிதைக்கும் நோக்கில் செயல்படுவதுதான் ஈழத் தமிழினத்தின் சாவக்கேடு.
“தியாகிகள் சாகலாம் தியாகம் சாகாது”