நாட்டின் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கும் முன்னோக்கி நகர்வதற்கும் தன்னுடன் இணைந்து செயற்பட்ட அனுபவசாலிகள் நாடாளுமன்றத்திற்கு செல்வது அவசியம் என முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க நாட்டு மக்களிற்கான விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உங்களது எதிர்காலத்தை புதிய நாடாளுமன்றம் தீர்மானிக்கின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக காஸ் சிலிண்டர் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.