பேராசிரியர் சிவசுப்பிரமணியம் இரவீந்திரநாத் 1951,பெப்ரவரி,22, பிறந்தவர் இலங்கையின்கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் ஆவார். இவர் கொழும்பில் 2006 டிசம்பர் 15 இல் இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு திரும்பியபோது இனம் தெரியாத ஆயுததாரிகளினால் கடத்தப்பட்டார்.
மாநாட்டில் கலந்து கொண்டிருந்த போது தொலைபேசி அழைப்பொன்று அவருக்கு வந்ததாகவும், அதனையடுத்து அவர் அங்கிருந்து வெளியேறியதாகவும் அவரைக் கடைசியாகக் கண்டவர்கள் கூறினர்.
துணை இராணுவக் குழுவான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களே இவரைக் கடத்தியிருக்கலாம் என உள்ளூர் ஊடகங்கள் அடுத்த நாள் 16/12/2006, செய்தி வெளியிட்டன. 2025/04/08, ல் 19, வருடங்கள் கடந்த நிலையில் விசாரணைக்காக பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு முன்னாள் இராஜங்க அமைச்சர் பிள்ளையானை கைது செய்துள்ளனர்.
அப்போது தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சொந்த மாவட்டங்களுக்கு செல்ல முடியாது கொழும்பில் மாதிவெல பாராளுமன்ற உறுப்பினர் விடுதியில் முடங்கி இருந்த காலம். 2004, ஏப்ரல்,04, நாடாளுமன்ற தேர்தல் 22, தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு.
(2004, மார்ச்,03. விடுதலைப்புலிகளில் இருந்து கருணா பிரிவுக்கு பின்னரே பாரிய கொலைக்களமாகவும், பிரதேசவாதமும், யாழ்ப்பாண வர்தகர்களை அச்சுறுத்தி அவர்களை வெளியேறுமாறு எச்சரித்த சம்பவங்கள் எல்லாம் மட்டக்களப்பில் இடம்பெற்றது)
2004,மே,24, கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் குமாரவேல் தம்பையா மட்டக்களப்பில் ஞானசூரியம் சதுக்கத்தில் வைத்து சுட்டுக்கொலை. 2004, மே,31, ஊடகவியலாளரும், இறைவரி திணைக்கள அலுவலருமான நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசன் மட்டக்களப்பு எல்லை வீதியில் வைத்து சுட்டுக்கொலை.
2005, ஏப்ரல்,24, மட்டக்களப்பு ஊடகவியலாளர் மாமனிதர் சிவராம் கொழும்பில் கடத்தி கொலை.
2005, டிசம்பர்,25, மாமனிதர் ஜோசப்பரராசசிங்கம் அவர்கள் மட்டக்களப்பு தேவாலயத்தில் சுட்டுக்கொலை.மனைவி படுகாயம்.
2006,ஜனவரி,30, தமிழர் புனர்வாழ்வு மனிதாபிமான பணியாளர்கள் மட்டக்களப்பில் இருந்து வன்னிக்கு செல்லும்போது பிறேமினி உட்பட ஆறுபேர் கடத்தி கொலை.
2006,ஆகஷ்ட்,04, திருகோணமலை மூதூரில் வெளிநாட்டு மனிதநேய நிறுவனப்பணியாளர்கள் 17, பேர் சுடரடுக்கொலை.
ரவிந்திரநாத்தை கடத்துவதற்கு சரியாக 25, நாட்களுக்கு முன்னம் 10/11/2006, ல் கொழும்பில் வைத்து யாழ்மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ரவிராஜ் சுட்டுக்கொல்லப்பட்டார்.
பேராசிரியர் ரவிந்திரநாத் கடத்தப்பட்டு 04, தினங்களால் 19/11/2006, ல் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த எனக்கும்(பா.அரியநேத்திரன்) கனகசபை ஐயா, தங்கேஷ்வரி அக்கா, ஜெயானந்தமூர்த்தி ஆகிய நால்வரையும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து உடனடியாக விலகுமாறும் விலகாவிட்டால் உயிருக்கு ஆபத்து வரும் எனவும் தாம் மண்முனை தென் எருவில் பற்று தவிசாளர் குணாளன் கூறுகிறேன். இது கருணா அம்மானின் கட்டளை எனவும் எச்சரிக்கப்பட்டது.
இதனை நாங்கள் பாராளுமன்றத்தில் சபாநாயகரிடமும், எதிர்கட்சி தலைவரிடமும்,பாராளுமன்ற காவல்துறையினரிடமும் முறையிட்டிருந்தோம்.
2007,டிசம்பர்,11, ல் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான எனது சகோதரர், கனகசபை ஐயாவின் மருமகன், தங்கேஷ்வரி அக்காவின் செயலாளர், ஜெயானந்தமூர்த்தியின் மருமன் ஆகிய நால்வரும் கடத்தப்பட்டனர், கடத்தியவர்கள் ரி .எம். வி. பி. ஆயுத்தாரிகள், இதுவும் பாராளுமன்றத்தில் முறையிட்டோம்.
பேராசிரியர் ரவிந்திரநாத் இக்கடத்தல் குறித்து பன்னாட்டு மன்னிப்பு அவைவெளியிட்ட அறிக்கையில், “இராணுவத்தின் தீவிரக் கட்டுப்பாட்டுப் பகுதியான, உயர் பாதுகாப்பு வலயத்தினுள் வைத்தே இக்கடத்தல் நடைபெற்றுள்ளதால், பாதுகாப்புப் படையினருடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களே இதனை மேற்கொண்டிருக்க வேண்டும் எனவும், இவர் சித்திரவதைக்குள்ளாக்கப்படும் ஆபத்து உள்ளதாகவும், ஏற்கனவே இதய நோய் உள்ளவர் என்பதால் இவரது உயிருக்கே இது ஆபத்தாக முடியலாம்” எனவும் எச்சரித்தது. கிழக்கிலங்கைப் பல்கலைக்கழக ஆசிரியர்களும் ஊழியர்களும் இவரை விடுவிக்கக்கோரி பணி நிறுத்தத்தை மேற்கொண்டனர்.
2004, தொடக்கம்,2010, வரையும் மிகவும் ஆபத்தான கொலைக்காலாசாரம் மட்டக்களப்பிலும், தொடர்ந்தது.
தமிழ்தேசிய அரசியல் என்பது எத்தனை கொலைகளை, அச்சுறுத்தல்களை, வலிகளை, சொந்த ஊர்களில் வழாமல் ஓடி ஒழித்த வேதனைகள், என பலவற்றை சுமந்துள்ளது.இந்த பயத்தால் 2010, பாராளுமன்றம் கலைக்கப்பட்ட போது மட்களப்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பில் வேட்பாளர்களாக வரமுடியாது என ஓடி ஒழித்தவர்கள் எத்தனபேர்?
2015, க்கு பின்னர்தான் மட்டக்களப்பில் நிலைமை சீரானதும் வேட்பாளர்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பில் அனேகர் வந்ததும் பழையவர்களை ஓரம்கட்டிய வரலாறுகள் எல்லாம் அதன்பின்னர்தான் தொடர்ந்தது/தொடர்கிறது..!
இந்த உண்மைகள், அச்சுறுத்தல்கள், எச்சரிக்கைகள் இன்றைய இளைஞர்களுக்கும், கட்சி உறுப்பினர்கள் பலருக்கும் தெரியாது.