ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து அதிரடியான பல்வேறு நிகழ்வுகளை காணக்கூடியதாக இருக்கின்றது. ஜனாதிபதி பதவி ஏற்பு, அமைச்சரவை பதவி ஏற்பு. அதனைத் தொடர்ந்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தலுக்கான அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டிருக்கின்றது . இந்த நிலைமையில் அந்த தமிழ் பொது கட்டமைப்பில் முக்கியமான ஒருவராக இருப்பவரும் பேராசிரியருமான கே.ரி கணேசலிங்கம் அவர்கள் அனைத்துலக உயிரோடை தமிழ் வானொலியின் தாயகக்களம் நிகழ்ச்சிக்கு வழங்கிய நேர்காணலை ‘இலக்கு’ வாசகர்களுக்காக இங்கே தருகின்றோம்.
இந்த ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் அரியநேத்திரன் அவர்கள் போட்டியிட்டு இருந்தார். அவருக்கு 2,26000 வரையிலான வாக்குகள் கிடைத்திருந்தன. இதன் மூலமாக எவ்வாறான செய்தியை மக்களுக்கு சொல்ல விரும்புகின்றீர்கள்?
வடக்கு கிழக்கு தழுவிய தாயகம் தேசியம் சுயநிர்ணயம் என்ற அடிப்படைகளுக்குள் செயல் பட்ட செயற்பட முனைந்த பொது வேட்பாளருக்கு மக்கள் வழங்கிய ஆதரவு, முதலில் அவர்களுடைய எண்ணங்களுக்கு தலை சாய்க்க வேண்டும். 2,26000 வாக்குகளை மிகக் குறுகிய நாட்களில், தமிழரசு கட்சி ஒருபுறம் அதேபோன்று தென்னிலங்கை வேட்பாளர்கள் இன்னொரு பக்கம். பகிஸ்கரிப்பு என்கின்ற கோசம் என்று பல்வேறுபட்ட நெருக்கடிகளுக்குள்ளால் இந்த மக்கள் தமிழ் பொதுக் கட்டமைப்பு மீதான நம்பிக்கையை பலப்படுத்தி இருக்கிறார்கள்.
ஈழத் தமிழர்களுடைய அரசியல் இருப்பை நோக்கி செயற்படக்கூடிய தலைமைகள் அவசி யம் என்பதையும் தலைமைகளை நோக்கி அவர்களுடைய தேடல் உண்டு என்பதையும் ஒரு தளத்தில் அவர்கள் முதன்மைப்படுத்தி இருக்கிறார்கள். நிச்சயமாக இது மக்கள் சார்ந்து இருக்கக்கூடிய ஒரு விடயம் ‘நமக்கு நாம்’ என்ற ஒரு கோசத்தோடு தான் உண்மையில் இந்த தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்திருந்தோம்.அந்த நமக்கு நாம் என்ற அந்த எண்ணத்தில் அவர்கள் ஒரு வெற்றிகரமான பங்கை அந்த மக்கள் ஆற்றி இருக்கின்றார்கள். உண்மையில் இந்த அரசியல் அந்த மக்களுடைய எண்ணங்களில் இருந்து புலப்படுகின்ற ஒரு விடயம். மீளமைக்கப்படுவது, சரி செய்யப்படுவது, தென்னிலங்கையோடு சேர்ந்து பயணிக்கின்ற அல்லது இந்த போலி தேசியம் பேசுகின்ற தரப்புகளை எவ்வாறு அகற்றுதல் என்பது பற்றிய எண்ணங்களோடு இந்த மக்களுடைய இருப்பு கட்டமைக்கப்பட்டிருக்கிறது. நிச்சயமாக இதை தென்னிலங்கை வேட்பாளருக்கு அளிக்கப்பட்ட வாக்குகளுடைய எண்ணிக்கையோடு பார்க்கின்ற போது அதை அதிகம் போலி தேசியவாதிகள் விமர்சிக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் நிச்சய மாகவே அந்த விமர்சனமும் ஒரு வகையான போலித்தன்மையை தான் வெளிப்படுத்துகிறது.
ஆகவே நிச்சயம் இந்த இடத்தில் தமிழ் மக்களுடைய எண்ணங்கள் அவர்களின் எதிர்காலத்தில் என்ன வகையான மாற்றங்களை ஈழத்தமிழர் அரசியலில் மேற்கொள்ள வேண்டும் என்பதை மிகத் தெளிவாகவே அடையாளப்படுத்தி, வடக்கு கிழக்காக ஒன்றிணைக் கப்பட்டிருக்கிறார்கள். அதேபோன்று வடக்கு மக்கள் பெருமளவுக்கு கிழக்கு வேட்பாளர் ஒருவருக்கு பெரிய அளவான ஒத்துழைப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள். நீதிமன்றங்களில் சென்று வடக்கு கிழக் கைப் பிரித்தாலும் தமிழ் மக்கள் ஈழத் தமிழர்களாக ஒன்றாக பயணிக்கிறார்கள் என்பதற்கான ஒரு அடிப்படையை மீளவும் ஒரு சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அதே நேரத்தில் பொது வேட்பாளர் தன்னை ஒரு குறியீடு என்று காட்டிக்கொண்டு செயற்பட்டது உண்மையிலேயே ஒரு தனித்துவமான இருப்பு தமிழர்களுக்கு உண்டு என்பதை மீளவும் ஒரு முறை உறுதிப்படுத்தி இருக்கின்றது.
தமிழ்ப் பொதுக் கட்டமைப்பினுடைய எதிர்கால திட்டங்கள் என்ன? எதிர்கால நகர்வுகள் எவ்வாறு இருக்கப் போகின்றது?
இந்த தேர்தல் முடிந்தவுடன், பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பாராளுமன்ற தேர்தலுக்கான ஒரு அறிவிப்பு வந்திருக்கிறது. பொதுக்கட்டமைப்பு உருவாக்கப்பட்ட மிகக் குறுகிய காலத்தில் முதலில் அது ஜனாதிபதி தேர்தலை எதிர்கொண்டது. இந்த சந்தர்ப்பத்தில் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் பொதுக்கட்டமைப்பு உரையாடல்களை மேற் கொண்டிருக்கின்றது. இந்த உரையாடல்களின் வெளிப்பாடுகள், எதை முன்னிறுத்த வேண்டும் என்ற ஒரு எண்ணத்தோடு செயற்படுவதாற்கான ஒரு செய்முறை ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டி ருக்கின்றது. அது தொடர்பான அறிவிப்பு அல்லது அது தொடர்பான முடிவுகளை அறிவிக்க வேண்டிய ஒரு தேவைப்பாடு எழுந்திருக்கின்றது.
பொது கட்டமைப்பு அல்லது இந்த பொது சபைக்குள் வராத ஏனைய தமிழ் தேசிய கட்சிகளையும் இணைத்துக் கொண்டு செல்வதற்கான வாய்ப்புகள் இருக் கின்றதா?
நிச்சயமாக, நாங்கள் அதை முன்கூட்டியே எல்லா தமிழ் கட்சிகளோடும் உரையாடி னோம். தமிழ் தேசிய எண்ணங்களை கொண்டி ருக்கக்கூடிய கட்சிகள் என்று தங்களை அடை யாளப்படுத்தியவர்களோடு உரையாடிக் கொண்டி ருக்கின்றோம். மீளவும் அந்த உரையாடல் அல்லது அதற்கான வாய்ப்பு அல்லது அவர்களை இதோடு சேர்த்து இணைத்துக் கொண்டு போவதற்கான அணுகுமுறை என்பது பெருமளவுக்கு இந்த பொதுச்சபையிடம் உண்டு. இதோடு இணைந்து பயணிக்கக்கூடிய தமிழ் தேசிய கட்சிகளை நாங்கள் இப்போதும் ஏற்றுக்கொண்டு தான் இருக்கின்றோம். அந்த கட்சிகள் தான் பெரு மளவுக்கு தங்களுடைய இருப்பு சார்ந்தும் தங்களுடைய கொள்கை சார்ந்தும் சில விடயங்களில் அவர்கள் முரண்படுவது போன்று காட்டிக் கொள்ள முயற்கின்றார்கள். ஆனால் பொதுக்கட்டமைப்பை பொறுத் தவரையில் அது வெளிப்படையாகவே எல்லா சந்தர்ப்பங்களிலும் அவர்களை வரவேற்று செயற்படுவதற்கு தயாராக இருக்கிறது.
இந்த ஜனாதிபதி தேர்தலை பொறுத் தவரையில் தென்னிலங்கை மக்கள் பெருமளவுக்கு வழமையான பாரம்பரிய மான கட்சிகளை நிராகரித்து புதிதாக ஒரு கட்சியை அதாவது அனுரகுமர திச நாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்திருக்கின்றார்கள். இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்?
இது ஒரு நீண்ட காலப்பகுதிக்குள்ளால் நிகழ்ந்தது.அனுரா குமார திசாநாயகாவினுடைய பாரம்பரியமான வடிவம் என்பது ஜேவிபி ஜனதா விமூர்த்தி பெரமுனவிலிருந்து ஆரம்பிக்கிறது ஏறக்குறைய அது 69,70களில் தொடக்கப்பட்ட ஒரு அமைப்பு.
ஆரம்பத்தில் ஆயுத போராட்ட அமைப் பாக இருந்து, பின்னர் அது படிப்படியாக 89களுக்கு பின்னர் அரசியல் கட்சியாக அது மாறி செயற்பட்டது. அதனுடைய அடிப்படை இருப்பு என்பது ஜேவிபியிலிருந்து தோற்றுவிக்கப்பட்டது. மக்கள், பாரம்பரியமான சிங்கள கட்சிகளை மாற்றுவதற்கு பின்னால் அரகலய போராட்டம் முக்கியமான காரணம். இலங்கையை பொறுத்தவரையில் ஒரு நீண்ட ஆயுத போராட்டம் வடக்கு கிழக்கில் இருந்தபோது தென்னிலங்கையில் இருந்த பாரம்பரிய கட்சிகளிடம் எழுந்திருந்த ஊழல் அந்த மீட்டுக்குடி ஆதிக்கம் அதேபோன்று அது சார்ந்து இருக்கக்கூடிய அரசியல் செல்நறிகளின் பலவீனங்கள் எல்லாவற்றையும் சிங்கள மக்கள் அடையாளம் கண்டு அதற்கு ஏற்ற வகையில் ஒரு புதிய உபாயத்தையும் புதிய அணுகுமுறையையும் அவர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்.
இந்த அணுகுமுறை அவர்கள் உலகளாவிய ரீதியில் ஏற்படுகின்ற மாற்றங்களோடு சேர்ந்து இந்த மாற்றத்தையும் தங்களுடைய எண்ணங்களுக்குள் முதன்மைப்படுத்தி இருக்கிறார்கள் .இது தொடர்ச்சியாக சில மாற்றங்களை தென்னிலங் கையில் முதன்மைப்படுத்த விளைகிறது. அது உள்நாட்டு கொள்கையிலும் சரி வெளிநாட்டுக் கொள்கையிலும் சரி பாரிய மாற்றங்களை அது முன்வைப்பவதற்கான அடிப்படையில் தருவித்திருக்கிறது.அதிலும் அது ஒரு இடதுசாரி பாரம்பரியத்தோடு தோற்றுவிக்கப்பட்ட கட்சி என்ற அடிப்படையில் அது இடதுசாரி மரபுகளில் சில அம்சங்களை அது இப்போதும் தனக்குள்ளே ஆழமாகக் கொண்டிருக்கின்றது. ஆனால் அது ஒரு முழுமையான ஒரு இடதுசாரி தளத்தில் இயங்குகின்ற கட்சி என்ற சூழல் மட்டுமல்லாமல் அது உலகளாவிய ரீதியிலும் அதற்கான வாய்ப்புகள் பெருமளவுக்கு அருகி இருக்கின்ற போது அந்த சந்தர்ப்பத்தில் அது மரபு சார்ந்து இருக்கக்கூடிய அந்த சோசலிசம் சார்ந்து இருக்கக்கூடிய அல்லது இந்த இடதுசாரி சார்ந்து இருக்கக்கூடிய எண்ணங்களோடு ஓரளவுக்கேனும் அது தன்னை கட்டமைக்க முயற்சிக்கின்றது. இரண்டாவது ஒரு கவர்ச்சிகரமான அல்லது ஈர்ப்புத் தன்மையோடு சாதாரண மக்களோடு இணைந்து போகக்கூடிய ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒத்துழைப்பு வழங்கக்கூடிய விதத்திலான ஒரு எண்ணங்களோடு சிங்கள மக்களை பெருமள வுக்கு முதன்மைப்படுத்துவதற்கு அது விளைந் திருக்கின்றது தென்னிலங்கை ஒரு மாற்றத்தை நோக்கி அரகலிய போராட்டம் எடுத்த எண்ணமும் அந்த சிந்தனையும் ஒரு ஆழமான மாற்றத்தை இன்றைய சந்தர்ப்பங்களில் ஏற்படுத்தி இருக்கிறது.