அதிகாரப்பகிர்வு முறையாகவும் உண்மையாகவும் செயல்படுத்தப்பட வேண்டும்…

இலங்கை அரசியலமைப்பில் அதிகாரப்பகிர்வு பகுதி முறையாகவும் உண்மையாகவும் செயல்படுத்தப்பட வேண்டும் என்று இணைந்த வடகிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில், தமிழ் அரசியல் கட்சிகள் பெரும்பாலும் அதிகாரப்பகிர்வையே விரும்புகின்றன.
இந்த விடயம் தொடர்பில், வடகிழக்கில் உள்ள தமிழ் அரசியல் பிரமுகர்களை சந்தித்து கலந்துரையாடியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தமிழர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்காக தமிழ் கட்சிகள் இந்தியாவுடனான தங்களது ஈடுபாட்டை அதிகரிக்க வேண்டும்.இந்தியாவில் வசிக்கும் அகதிகள் தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

முகாம்களில் தங்கியிருக்கும் அகதிகள் நாட்டுக்கு வருகைத்தருவதற்கான கட்டுப்பாடுகளையும் தளர்த்தலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன், தற்போதைய ஜனாதிபதி உள்ளிட்ட தரப்பினர் அரசியலமைப்பை நிலைநிறுத்துவதற்கு உறுதிபூண்டுள்ளனர்.எனவே, அது அவர்களின் பொறுப்பு என்றும் இணைந்த வடகிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தெரிவித்துள்ளார்.