அதிகரித்த வேட்பாளர்களும் வாக்குச் சிதறலும்-துரைசாமி நடராஜா

ஒவ்வொரு சமூகத்தினரும் தங்களது பல்துறை சார் உரிமைகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு அரசியல் பிரதிநிதித்துவம் மிகவும் அவசியமாகின்றது. பின்தங்கிய சமூகங்கள் பல முன்னிலைக்கு வருவதற்கு ஆக்கபூர்வமான அரசியல் பிரதிநிதித்துவம் தோள் கொடுத்திருக் கின்றது என்றால் மிகையாகாது. இந்தவகையில் சிறுபான்மை மக்களின் குறிப்பாக மலையக மக்களின் தேவைகள் இன்னும் தீர்த்து வைக் கப்படாத நிலையில் அரசியல் ரீதியான ஆதிக்கம் இத்தகைய சமூகங்களுக்கு மிகவும் அத்தியாவசியமாகின்றது.  இந்நிலையில் சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை மழுங்கடிக்கும் நோக்கில் திரைமறைவு செயற்பாடுகள் இடம்பெற்று வருவதனை அவதானிக்கக் கூடிய தாக உள்ளது. இதில் ஒரு அம்சமாக தமிழ் மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் சுயேச்சைக் குழுக்கள் அதிகமாக களமிறக்கப் பட்டிருப்பதனை அவதானிக்க முடிகின்றது. இத்தகைய நிலைமைகள் வாக்குச் சிதறல்களு க்கு அடிப்படையாக அமைவதோடு அது சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை கேள்விக்குறியாக்கிவிடும் என்பதையும் மறுப்பதற் கில்லை.

இலங்கையின் தேர்தல் வரலாற்றில் பாரா ளுமன்ற தேர்தல் முக்கியத்துவம் மிக்கதாக விளங்குகின்றது. இத்தேர்தலின் ஊடாக தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதில் மக்கள் தொடர்ச்சியாக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இதனடிப்படையில் 1947 இல் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் டி.எஸ்.சேனநாயக்கா பிரதமராக தெரிவானார்.

இத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 751,432 வாக்குகளைப் பெற்றுக் கொண்ட நிலையில் 42 ஆசனங்களை கைப்பற்றிக் கொண்டது. 1952 பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 54 ஆசனங்களையும், 1956 பொதுத்தேர்தலில் மக்கள் ஐக்கிய முன்னணி 51 ஆசனங்களையும், 1960 மார்ச் மாதம் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 50 ஆசனங்களையும், அதே வருடத்தில் ஜூலை மாதத்தில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 75 ஆசனங்களையும், 1965 பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 66 ஆசனங்களையும், 1970 இல் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 91 ஆசனங்களையும், 1977 பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 140 ஆசனங்களையும், 1989 பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 110 ஆசனங்களையும், 1994 பொதுத்தேர்தலில் பொதுசன ஐக்கிய முன்னணி 91 ஆசனங்களையும், 2000 மாம் ஆண்டு பொதுத்தேர்தலில் பொதுசன ஐக்கிய முன்னணி 94 ஆசனங்களையும், 2001 ம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 96 ஆசனங்களையும், 2004 பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 92 ஆசனங்களையும், 2010 பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 127 ஆசனங்களையும், 2015 பொதுத்தேர்தலில் நல்லாட்சிக்கான ஐக் கிய தேசிய முன்னணி 93 ஆசனங்களையும் கைப் பற்றிக் கொண்டன. 2020 ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெற்ற நிலையில் இக்கட்சிக்கு பாராளுமன்றத்தில் 145 ஆசனங்கள் கிடைத்தன. ஐக்கிய மக்கள் சக்தி 54 ஆசனங்களையும், இலங்கை தமிழரசுக் கட்சி 10 ஆசனங்களையும் இத்தேர்தலில் பெற்றுக் கொண்டன.

நிறைவேற்று அதிகாரம் 

இம்முடிவுகளுக்கேற்ப 1952 இல் டட்லி சேனநாயக்கா, 1956 இல் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா, 1960 மார்ச் மாதம் இடம் பெற்ற பொதுத்தேர்தலில் டட்லி சேனநாயக்கா, அதே வருடத்தில் ஜூலை மாதம் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் திருமதி ஶ்ரீ மாவோ பண்டார நாயக்க, 1965 இல் டட்லி சேனநாயக்க, 1970 இல் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க, 1977 இல் ஜே.ஆர்.ஜயவர்த்தன, 1989 இல் டி.பி.விஜேதுங்க, 1994 இல் திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, 2000 இல் ரத்னசிறி விக்கிரமநாயக்க, 2001 இல் ரணில் விக்கிரமசிங்க, 2004 இல் மஹிந்த ராஜபக்ஷ, 2010 இல் தி.மு.ஜயரட்ன, 2015 இல் ரணில் விக்கிரமசிங்க போன்றோர் பிரதமராக தெரிவாகி இருந்தனர். இதேவேளை ஜே.ஆர்.ஜயவர்தன, ஆர்.பிரேமதாச, டி.பி.விஜேதுங்க, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, கோட்டபாய ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட  ஜனாதிபதியாக பதவி வகித்துள்ளனர்.

நாட்டின் சமகால தேர்தல்களில் 1977ம் ஆண்டு இரண்டாவது குடியரசு யாப்பின் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்ட விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறை பின்பற்றப்படுகின் றது. இத்தேர்தல் முறைமையானது நாட்டின் அபிவிருத்திக்கும் ஐக்கியத்துக்கும் குந்தகமாக உள்ளதாக கருத்து வெளிப்பாடுகள் இருந்து வரும் நிலையில் புதிய தேர்தல் முறைமையின் அவசியம் தொடர்பிலும் வலியுறுத்தல்கள் இருந்து வருகின்றமையும் தெரிந்ததேயாகும்.

இதேவேளை நாட்டின் 10 ஆவது பாராளுமன்றத்துக்கு 225 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ம் திகதி இடம்பெறவுள்ளது. இத்தேர்தலில் நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட 690 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் 74 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் திகாமடுல்லை தேர்தல் மாவட்டத்தில் அதிகமாக 64 குழுக்கள் (அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீனக் குழுக்கள்) போட்டியிடுகின்ற நிலையில் பொலனறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் குறைந்தளவான குழுக்கள் போட்டியிடுகின்றன. இதற்கேற்ப 15 குழுக்கள் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். ‌  பாராளுமன்ற தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்து வரும் நிலையில் அரசியல் கட்சிகளும், சுயேச் சைக் குழுக்களும் உச்சகட்ட பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ளும் நோக் கில் காய்நகர்த்தல்களை மேற்கொண்டு வருகின் றன.

இதேவேளை இம்முறை தேர்தலில் அதிகளவான சுயேச்சைக் குழுக்கள் களமிறக்கப் பட்டுள்ளதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. குறிப்பாக சிறுபான்மை மக்கள் அதிகமாக உள்ள இடங்களில் சுயேச்சைக் குழுக்கள் அதிகமாக களமிறக்கப்பட்டுள்ளன.  இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 23 அரசியல் கட்சிகளும் 21 சுயேச்சைக் குழுக்க ளும் போட்டி யிடுகின்றன. மட்டக்களப்பு மற்றும் வன்னி மாவட்டங்களில் இருபதுக்கும் அதிகமான சுயேச்சைக் குழுக்கள் போட்டியிடுகின்றன. இதேவேளை மலையக மாவட்டங்களிலும் சுயேச்சைக் குழுக்களின் அதிகரித்த தன்மையை காணமுடிகின்றது. இம்முறை இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட் டத்தில் 8 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 17 அரசியல் கட்சிகளும் 11 சுயேச்சைக் குழுக்களும் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளன. இதற்கமைய 308 வேட்பாளர்கள் இம்முறை நுவரெலியா மாவட்டத்தில் களமிறங்குகின்றனர். ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் திகாம்பரம், உதயகுமார், இராதாகிருஸ்ணன் ஆகியோரும் ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டணி கட்சிகள் சார்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸைச் சேர்ந்த ஜீவன் தொண்டமான், ராமேஷ்வரன், பழனி சக்திவேல் மற்றும் ஐ.தே.க.வில் இருந்து சதானந்தன் திருமுருகன் ஆகி யோர் நுவரெலியா மாவட்டத்தில் களமிறங்கியுள் ளனர். இந்நிலையில் நுவரெலியா மாவட்டத் திற்குட்பட்ட மஸ்கெலியா, வலப்பனை, கொத்மலை, ஹங்குரான்கெத்த ஆகிய தொகுதிக ளில் இருந்து 605,292 வாக்காளர்கள் 534 வாக்க ளிப்பு நிலையங்களில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் இரத்தினபுரி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நோக்கில் 18 அரசியல் கட்சிகளும் 07 சுயேச்சைக் குழுக்களும் வேட்புமனுவை தாக்கல் செய்து ள்ளன. 11 பாராளுமன்ற பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கு இம்முறை இரத்தினபுரி மாவட்டத் தில் 350 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதேவேளை கண்டி மாவட்டத்தில் இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட 22 அரசியல் கட்சிகளினதும் 12 சுயேச்சைக் குழுக்களினதும் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இதற்கேற்ப இம்மாவட் டத்தில் 12 ஆசனங்களுக்காக 510 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளதாக மாவட்ட செயலாளரும் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான சந்தன தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

அரசியல் பின்னடைவு

மலையகம் உள்ளிட்ட தமிழர் செறிந்து வாழும் பகுதிகளில் சுயேச்சைக் குழுக்கள் இவ்வாறாக அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையானது வாக்குச் சிதறல்களுக்கு வித்திடுவதாக அமையும் என்பதே உண்மையாகும். இதனால் சிறுபான்மை சமூகத்தினரின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் மழுங்கடிப்பிற்கு உள்ளாகும் அபாயநிலை மேலெழுந்துள்ளது. இது இம்மக்களின் அரசியல் பின்னடைவிற்கு உந்துசக்தியாக அமைவதோடு மேலும் பல தாக்க விளைவுகளையும் ஏற்படுத் தும்.

இதேவேளை கடந்த கால தேர்தல்களில் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறைமையில் காணப்படும் கடினத் தன்மை வாக்குகள் நிராகரிக்கப்படுவதற்கு வித்திட்டுள்ளதாக புத்திஜீவிகள் சுட்டிக்காட்டு கின்றனர்.பாராளுமன்றத் தேர்தல், உள்ளூரா ட்சி மன்றத் தேர்தல், மாகாண சபை தேர்தல், ஜனாதிபதி தேர்தல் அனைத்திலும் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் தாக்கம் அதிகமாகவே காணப்படுகின்றது. குறிப்பாக 2020ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண் ணிக்கை 16,263,885 ஆகவிருந்த நிலையில் 12,343,302 வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தன. இவற்றுள் செல்லுபடியான வாககுகளின் எண்ணிக்கை 11,598,929 ஆகவிருந்த நிலையில் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 744,373 ஆகவிருந்தது. அரசாங்க உத்தி யோகத்தர்களின் தபால் மூல  வாக்குகள் கூட நிராகரிக்கப்பிற்கு உள்ளாகியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஒரு  கோடியே 36 இலட்சத்து 19 ஆயிரத்து 916 பேர் வாக்களித்திருந்தனர். இவற்றுள் மூன்று இலட்சத்து 300 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன. நிராகரிக்கப்பட்ட வாக்குக ளின் எண்ணிக்கையில் மலையக மக்களின் வாக்குகளும் அதிகளவில் உள்ளடங்குகின்றன. இத்தகைய நிலை காரணமாகவும் மலையக மக்களின் அரசியல் பிரதிநிதித்துவம் வீழ்ச்சியடை யும் அபாய நிலை மேலெழுந்துள்ளது.

கண்டி, பதுளை, நுவரெலியா உள் ளிட்ட பல இடங்களில் இம்முறை தமிழ் பிரதி நிதித்துவத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு பகீரதப் பிரயத்தனத்தை மேற்கொள்ள வேண்டி யுள்ளது. 1994 இல் கண்டி மாவட்டத்தில் போட்டி யிட்ட எஸ்.இராஜரட்ணம் முதல் தடவையாக பாராளுமன்றத்துக்கு தெரிவாகி இருந்தார். அதன் பின்னர் இடம்பெற்ற பொதுத்தேர்தல்களில் கண்டி மாவட்ட தமிழ் பிரதிநிதித்துவம் கேள்விக்குறியாகி இருந்தது. எனினும் 2015 மற்றும் 2020 ம் ஆண்டுகளில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் வேலு குமார் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். இந்நிலையில் கண்டி மாவட்ட தமிழ் பிரதிநிதித்துவம் இம்முறை மீண்டும் தக்க வைக்கப்படுமா என்ற கேள்விக்குறி இப்போது மேலெழுந்துள்ளது. மலையக மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் இன்னும் அதிகமுள்ளன. குடியிருப்பு, கல்வி, தொழில்வாய்ப்பு, பொருளாதாரம், சுகாதாரம், காணியுரிமை எனப்பலவும் இதில் உள்ளடங்கும். இவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொடுப் பதில் அரசியல் பிரதிநிதித்துவத்தின் வகிபாகம் அதிகமாகும்.

பிரதமரின் நிலைப்பாடு 

இதனிடையே பெருந்தோட்ட மக்கள் இந்த நாட்டின் முழுமையான பிரஜைகள். ஏனைய தரப்பினருக்கு கிடைக்கும் உரிமை கள் அவர்களுக்கும் முழுமையாக கிடைக்க வேண்டும். அதனை உறுதிப்படுத்த வேண்டும். பெருந்தோட்ட மக்கள் அரசியலில் நேரடியாக பங்குபற்ற முடியாத நிலைமை காணப் படுகின்றது. எந்த பிரச்சினைகளுக்கும் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளை நாடும் நிலைமை காணப்படுகின்றது.

இந்நிலைமை மாற்றம் பெறவேண்டும். சுதந்திரமாக தமது அரசியல் பிரதிநிதித்துவத்தை தெரிவு செய்ய வேண்டும். பெருந்தோட்ட மக்கள் நேரடியாக அரசாங்கத்துடன் தொடர்பு கொள் வதையே எதிர்பார்த்துள்ளோம். காணி மற்றும் சம்பள பிரச்சினைக்கு கொள்கை அடிப்படையில் தீர்வினைப் பெற்றுக் கொடுப்போம். இவ்விரு விடயங்களுடன் மாத்திரம் பெருந்தோட்ட மக்களை வரையறுக்க முடியாது. பெருந்தோட்ட மக்கள் மத்தியில் புதிய அரசியல் தலைமைகள் தோற்றம் பெற வேண்டும். அதற்கு நாங்கள் வாய்ப்பளிப்போம் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பெருந்தோட்ட மக்களுக்கு புது இரத்தம் பாய்ச்சி இருக்கின்றார்.