மாகாணசபைத் தேர்தலை அடுத்த வருடம் நடத்த வேண்டும் என்ற முடிவில் அமைச்சரவையும் உறுதியாக உள்ளது என நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார்.
எனினும், எந்த முறைமையில் தேர்தல் நடத்தப்படும் என்பது பற்றி முடிவெடுக்கப்படவில்லை எனவும் அவர் கூறினார்.
அதேவேளை, புதிய அரசமைப்பு இயற்றப்படும் என தேசிய மக்கள் சக்தியால் வழங்கப்பட்ட உறுதிமொழியும் நிறைவேற்றப்படும். அதற்கான கால எல்லையை சரியாக குறிப்பிட முடியாதுள்ளது எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.