450 Views
தெல்தெனிய – ரம்புக்வெல்ல பகுதியில் பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பேருந்தொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அரச பேருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றினை முந்தி செல்ல எத்தனித்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் காயமடைந்தவர்கள் தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, தெல்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.