வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியரை நியமிக்கக் கோரி முல்லைத்தீவில் மக்கள் ஆர்ப்பாட்டம்

322 Views

முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியரை நியமிக்கக் கோரி முல்லைத்தீவில் மக்கள் இன்று(29) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முல்லைத்தீவு சுகாதார சேவைகள் பணிமனை, முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலைகளுக்கு முன்பாக ஒன்றுகூடிய மக்கள், முல்லை. உண்ணாப்புலவு பிரதேச வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியர் ஒருவரை நியமிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் வைத்தியசாலை வளாகத்தில் அமைந்துள்ள பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்குள் புகுந்து முற்றுகைப் போராட்டத்திலும் ஈடபட்டனர்.

போராட்டம் காரணமாக பொலிசார் அங்கு நிறுத்தப்பட்டிருந்தனர். போராட்டம் காரணமாக முல்லைத்தீவு நகரமே வெறிச்சோடிக் காணப்பட்டது.
dfgdfsgd வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியரை நியமிக்கக் கோரி முல்லைத்தீவில் மக்கள் ஆர்ப்பாட்டம்

Leave a Reply