வெள்ளத்தில் மூழ்கிய யாழ் நகர் மற்றும் பிற பகுதிகள்

617 Views

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக யாழ் நகர் மற்றும் நல்லூர்  பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன.

IMG 0376 வெள்ளத்தில் மூழ்கிய யாழ் நகர் மற்றும் பிற பகுதிகள்

இதனால் மக்கள், தங்களது அன்றாட செயற்பாடுகளை முன்னெடுப்பதில் சிரமங்களை எதிர்நோக்கி உள்ளனர்.

IMG 0388 வெள்ளத்தில் மூழ்கிய யாழ் நகர் மற்றும் பிற பகுதிகள்

புரெவி புயல் தாக்கத்தினை தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக கன மழை பெய்து வருகின்றது.

IMG 0389 வெள்ளத்தில் மூழ்கிய யாழ் நகர் மற்றும் பிற பகுதிகள்

அந்தவகையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக  13 ஆயிரத்து 707 குடும்பங்களைச் சேர்ந்த 45 ஆயிரத்து 318 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

IMG 0375 வெள்ளத்தில் மூழ்கிய யாழ் நகர் மற்றும் பிற பகுதிகள்

குறிப்பாக  யாழ். மாவட்டத்தில் பருத்தித்துறை, சண்டிலிப்பாய் மற்றும் நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளவர்களே அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply