வெல்லாவெளி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு – வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுரவணையடியூற்று பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுரவணையடியூற்று பகுதியை சேர்ந்த 42 வயது மதிக்கத்தக்க நான்கு பிள்ளைகளின் தந்தையான நல்லதம்பி வீரப்பா என்பவர் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டின் வாசலில் இருந்த மரத்தின் கீழ் உறங்கிய நிலையில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து திடீர் மரண விசாரணைகளின் பின்னர் சடலம் மேலதிக விசாரணைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply