“வெற்றித் திறவு கோல்” நூல் வெளியீட்டு விழா நிகழ்வு.

பொக்கிசம் அமைப்பின் ஆதரவில் எழுத்தாளரும் பேச்சாளருமான கு.குணசிங்கம்(கே.ஜி.மாஸ்டர்) அவர்களின் “வெற்றித் திறவுகோல்” நூல் வெளியீட்டு விழா வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க கலாசார மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.

வவுனியா பாரதி வித்தியாலத்தின் அதிபர் எ.முரளிதரன் தலைமயில் இடம்பெற்றநிகழ்வில், விருந்தினர்களாக தமிழருவி சிவகுமாரன்,மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ். ஶ்ரீனிவாசன்,விரிவுரையாளர் இ.புஸ்பகாந்தன்,சட்டத்தரணி இ, தயாபரன்,அமுதம் சேதண அமைப்பின் தலைவர் நேசராஜா,பொக்கிசம் அமைப்பின் சி.நந்தினிஆகியோர் கலந்துகொண்டனர்.

மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய நிகழ்வில் சிவசிறி சோமகிரிதர குருக்களின் ஆசியுரையினை தொடர்ந்து ஏனைய நிகழ்வுகள் இடம்பெற்றது.

நூலின் முதற்பிரதியை விரிவுரையாளர் புஸ்பகாந்தனிடம் இருந்து சர்வோதயா மாவட்ட இணைப்பாளர் உதயகுமார் பெற்றுக்கொண்டார். நூலிற்கான வெளியீட்டுரையை சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.ஶ்ரீனிவாசனும்,நயவுரையை தமிழருவி சிவகுமாரனும் நிகழ்த்தியிருந்தனர்.

IMG 7290 “வெற்றித் திறவு கோல்” நூல் வெளியீட்டு விழா நிகழ்வு.

IMG 7177 “வெற்றித் திறவு கோல்” நூல் வெளியீட்டு விழா நிகழ்வு.

Leave a Reply