சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு அகம் மனிதாபிமான வளநிலையத்தின்(AHRC ) ஏற்பாட்டில் திருகோணமலை, வெருகல் பிரதேச சிவில் அமைப்புகளினால் இன்று (04) திங்கட்கிழமை வட்டவன் பகுதியில் கிராம அபிவிருத்திச் சங்க கட்டடத்தில் மனித உரிமைகள் தின வாரம் அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது வெருகல் பகுதியில் மீறப்பட்டு வருகின்ற மனித உரிமைகள் தொடர்பாக மக்கள் கருத்து தெரிவித்திருந்தனர். குறிப்பாக தமது பிரதேசத்தின் மணல் வளம் சுரண்டப்படுகின்றமை, காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளமை, பொலிஸ் நிலையத்தில் தமிழ் மொழியில் முறைப்பாடுகளை பெறுவதற்கு மறுப்பு தெரிவிக்கப்படுகின்றமை உட்பட பல மனித உரிமை மீறல் தொடர்பான விடயங்களை தெரிவித்ததோடு அது தொடர்பான மகஜர் ஒன்றினை மனித உரிமைகள் தினத்தன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கையளிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு AHRC நிறுவன சிவில் செயற்பாட்டாளர்களினால் டிசம்பர் 04ஆம் திகதி முதல் 12ஆம் திகதிவரை மனித உரிமைகள் தின வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.